உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும் கு

259

வலியறிதலில் வரும் இக்குறளும் இன்னும் மூன்று குறள்களும் (477-80) பொருள் அளவு வலிமையை அறிந்து கடமை புரிதல் பற்றியதே யாகும். இதில் ஆகாறு என்பது வரவு; போகாறு என்பது செலவு.

வரவு சிறிது எனினும் அதனால் குறைவு இல்லை; செலவு மட்டும் வரவுக்கும் மேல் ஆகாமல் இருத்தல் வேண்டும் என்பதைச் சுட்டுகிறார். வீட்டுக்கு விளக்காகிய துணையின் செயற்பாட்டைக் கூறும் இடத்திலும் "தற்கொண்டான் வளத்தக்காள்" என்றதும், "இல்லதென் இல்லவள் மாண் பானால்" என்றதும் இவண் எண்ணத் தக்கனவாம்.ஒருவர் தேடும் வாழ்வு எனினும் இருவர் தேடும் வாழ்வு எனினும் பலர் தேடும் வாழ்வு எனினும் முந்தையர் வைத்த தேட்டு வாழ்வு எனினும் வரவில் செலவு மிகாமை வேண்டும் என்பது பொது விதியேயாம். இவ்வாகாறுக்குக் கால்வாயையும், போகாறுக்கு வாய்க்காலையும் எடுத்துக்காட்டாகக் கொண்டால் குடும்ப வேளாண்டை இனிதின் இயலும் என்பது வெளிப்படையாம்.

உள்ள பொருள் இழந்து போதலை 'உள்வீழ்தல்' என அருமையாக வழங்குவார் வள்ளுவர். கடனுக்கு ஆற்றாமல் தலைமறைவாகி ஓடிப் போவதும், உள்ளவற்றை முறை மன்ற ஒப்படை வழியே இத்தனை விழுக்காட்டு மேனி எனப் பகுத்து வழங்குவதும் சிலச் சிலர் வாழ்வில் நிகழ்வனவே. அதனை, 'மஞ்சள் கடிதம்' பெறல் என்பர். 'திவாலா' ஆதல், 'ஜ.பி.தரல்' எனப் பிற சொற்களாலும் வழங்குவர். இதற்கு உள் வீழ்தல் என்னும் கலைச் சொல்லை வழங்கும் வள்ளுவர், "உள் வீழும் நிலையில் இருப்பினும் பழயைான பண்பட்ட குடியினர் தம் இயல்பில் குறைய மாட்டார்" என்கிறார். அவர் பழகிப் பழகிப் போன பண்பியல் ஈதென்றாரேயன்றி, அவர் உள்ளவை வீழ்ந்து பாழாதல் பண்பாடு என்று பகர்ந்தார் அல்லர் என்பதை எண்ணின் தன்னிறைவுக் குடும்பமே வள்ளுவர் எண்ணமாதல் புலப்படும்.

குடும்ப அரசு

நாட்டரசின் மூல வித்து வீட்டரசு. வீட்டரசுச் செம்மையே

நாட்டரசுச் செம்மை! வீட்டரசு பாழ்படின் நாட்டரசும் பாழ்படல் உறுதி. அரச பொதுச்சிக்கல் ஆகலின் அப்பகுதியில் காண்டல் முறை எனினும் இவண் சுட்டல் வேண்டத்தக்கதாம். முடியாட்சிக் கால நிலையிலும் குடியாட்சிக் கால நிலை