உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும் "கொலைமேற் கொண்டாரிற் கொடிதே அலைமேற் கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து

எனப் பழிக்கிறார்.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்"

என்னும் உழவுரிமையாளன் போல,

“நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்”

271

என்று கூறுகிறார். இவ்வாள்வோன் இலக்கணம் அனைத்தும் மக்களாட்சியில் முதல்வர்களுக்கும், தலைமையமைச்சர்க்கும் உரியனவே அல்லவோ? இவ் ஒவ்வொரு குறளையும் முன்வைத்து ஒவ்வொரு நாள் நாட்டுச் செய்தியையும் ஒப்பிட்டால் முதல்வர்கள் நிலை என்ன? தலைமை அமைச்சர் நிலையென்ன?

“பழுதெண்ணும் மந்திரியுள் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி யுறும்”

என்ற நிலைமை மாறிப், பழுதெண்ணும் மந்திரியராகவே சூழப் பெற்ற அரசுக்கு நாடே பகையாகி விடுவதல்லது என் செய்யும்?

"அல்லல்பட் டாற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை'

என்று மெல்லியர் கண்ணீர் வடிக்கவும், அதனால் அரசினை மாற்றியமைக்க இயலாச் சூழல் உண்டாகுமானால்,

"சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்"

என்னும் வன்கண்மை நாட்டில் உருக் கொள்ளல் தீரா நிலையாய் ஆகிவிடும் அல்லவோ?

இற்றை நாட்டின் வன்முறைப் போக்குகளை யெல்லாம் தூண்டி விட்டுத் துலக்கிக் கொண்டிருப்பவர் பெரிதும் ஆட்சிக் கட்டிலரும் அவர் அரவணைப்பும் பாதுகாப்பும் உடையவருமே யாம் என்பதை உணர்வோர் இச்சிக்கலைத் தீர்க்க வள்ளுவத்தை மேற்கொண்டால் அன்றித் தீர்வு இல்லையாம்.