உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

திருக்குறள் ஒன்றேபோதும் தமது வேலையைச் சரியாகச் செய்ய, அவர்களை உத்தியோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பரீபசை வைக்கும்போது கூடத் திருக்குறளிலிருந்து தான் கேள்வி கேட்கப்பட வேண்டும். திருக்குறளை நன்கு உணர்ந்திருந்தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும். திருக்குறளும் பெரியாரும் : 33-34

அரசியலுக்கும் ஆட்சிக்கும் திருக்குறள் கல்வி எவ்வளவு இன்றியமையாதது என்பதை இதனினும் மேலாக எப்படி விளக்க முடியும்.

ஆட்சி

ஆட்சி என்பது இறைமை; அதனைச் செய்பவன் 'இறை' எனப்பட்டான். அவன் நடுவு நிலையாளனாக அமைந்து குடிநலங்காக்கும் கடமையாளன் ஆதலால், அவனே இறையாகவும் கொள்ளப்பட்டான்.

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்'

""

என்பது வள்ளுவம்; இதனையே,

“ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய் வஃதே முறை'

என்றும் கூறுகின்றது. மேலும்,

"தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு”

"இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு”

என்று இடித்தும் கூறுகின்றது.

காட்சிக்கு எளிமை, கடுஞ் சொல் இன்மை, செவிகைப்பச் சொற் பொறுத்தல், வெருவந்த செய்யாமை என்பவை எல்லாம் ஆட்சியாளனுக்கு வேண்டும் என வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

"கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனோடு நேர்'

என்று கூறி, அவ்வாட்சியாளனே கொலையிற் கொடியன் எனின்,