உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

269

இறைமாட்சிக்கு இன்றியமையாதது கல்வி அறிவு என்பது தானே இவற்றின் வைப்பு முறை விளக்கம். கல்வி அறிவில்லா வேந்து எப்படி அமையும்?

“கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்

கல்லா அரசனின் காலன் மிகநல்லன்

கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான்

நல்லாரைக் காலன் நணுககில் லானே"

(238)

“கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்

கல்லாத மூடர் கருத்தறி யாரே”

என்னும் திருமூலங்களைக் காணின் தெளிவாம்.

66

(317)

நாட்டில் வள்ளுவர் வகுத்த கல்வி, வாய்க்கவில்லை. அடிமையாய் இருக்க வேண்டும்" என்றே அமைத்த கல்வி, விடுதலை நாட்டிலும் விலகாமல் நிலைபெற்றது. வாழும் கல்வியாக இல்லாமல் அழிவுக் கல்வியாகவும் நிலைபெறத் தங்கிவிட்டது. இதன் விளைவென்ன?

பயன் பாடு மிக்க விளை நலப் பயிராம் மாணவர்கள். களைச்செடியும் முட்புதரும் நச்சுமரமும் ஆகிப் போலித் தலைமுறையாயும், மதிமயக்கத் தலை முறையாயும், முடம் பட்டும் கிடம்பட்டும் போன தலைமுறையாயும் வளர்கின்றனர். இச்சிக்கலைத் தீர்க்க உடனடியாக வள்ளுவ வழிக் கல்வி கட்டாயம் வேண்டும். இதோ ஓர் ஒலியைக் கேளுங்கள்: 14-3-1948 இல் மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகச் சார்பில் ஒலித்த ஒலி அது : ஒலித்தவர் தந்தை பெரியார்:

"100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் டெக்ஸ் புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்கள் ஆவதை விட 3 அணாவுக்குத் திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் கூறுகிறேன்.

திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க; உலகம் ஞானம் ஏற்பட; அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இது வரை அலட்சியப் படுத்தி வந்திருக்கிறோம். ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட், ஒரு நீதிபதி, ஒரு சப்இன்ஸ்பெக்டர், இவர்களுக்குக் கூடத்