உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

நற்செய்தி கேட்பவரே பணிவினர் என்றும், அவரே கூர்ஞ் செவியர் என்றும், அவரே வாழத்தக்கார் என்றும் கூறும் வள்ளுவர்,

“எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்”

என்கிறார்.

வள்ளுவர் காட்டும் அறிவுடைமை நனி சிறப்புடைய தாகும். "மெய்ப் பொருள் காண்பதே அறிவு" என்று கூறும் அழுத்தம் எத்தனை அறிஞர் பெருமக்களுக்கு மூலவைப்பு. புத்தரும், சாக்கிரடீசரும், இங்கல்சாலரும், பெரியாரும் முழங்கியவை தாமே,

"எப்பொருள் யார்யார்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்பதும்,

""

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்பதுமாம்.

அறிவுடையார் எல்லாம் உடையார் என்றும் அறிவுடை யார் ஆவதறிவார் என்றும் எதிரதாக் காக்கும் அறிவுடையாக்கு அதிர வருவதோர் நோய் இல்லை என்றும், அறிவு அற்றம் காக்கும் கருவி என்றும், சென்ற இடத்தால் செல்ல விடாது தீமையில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்துவதே அறிவு என்றும் அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு என்றும், அறிவினால் ஆகுவதுண் டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை என்றும் கூறும் அறிவிலக்கணம் இவ்வறிவியல் உலகமும் தலைமேல் கொள்ளத் தக்கவை அல்லவோ?

கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்னும் நான்கு அதிகாரத் தொடர்களையும் வள்ளுவம் எங்கே வைத்துளது?

பொருட்பாலைத் தொடங்கி இறைமாட்சியை இசைத்த இசைப்பினைத் தொடர்ந்தே வைக்கப்பட்ட வைப்புப் பொருள்கள் தாமே இவை!