உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

267

செல்வம் இருக்கும் போது கல்வி எதற்கு என்னும் எண்ணம் இல்லாராய்க் கற்றனர் என்பது,

“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை'

""

என்பதால் புலப்படும். மேற்குடிப் பிறப்பினும் கல்லாதான் கீழ்ப் குடிப்பிறப்பனே என்றும், கல்லார் விலங்கு என்றும் குறிக்கப் படுதல் கொண்டே ஆறறிவுப் பிறப்பியின் அடையாளம் கல்வியே என்பது விளக்கமாகும்.

கல்லான் விளைநில மல்லன்; களர்நிலம்.

கல்லான் அழகு, உயிரிலாப் பொய்ம்மை அழகு. கல்லான் செல்வம், பொல்லாக் கேடு தருவது. என்றெல்லாம் வள்ளுவக் 'கல்லாமை தெளிவுடையது.

'கல்லாமை' சுட்டுதல், எத்தகு

அப்படியே, அடிப்படைக் கல்வியைப் பெற இயலாதாரும் அக்குறையை நீக்கிக் கொள்ளுதற்குக் கற்றோர் கூறும் நல்லுரையைக் கேட்டுப் பயன் கொள்ளல் வேண்டும் என்பாராய்க் 'கேள்வி' என்பதோர் அதிகாரம் வகுத்தமை பாராட்டுக்குரியதாம்.

“கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை ஆ

என்னும் குறளைக் காண்க. 'கல்வி' ஆற்றுப் பெருக்கு அன்னது என்றால் 'கேள்வி' ஊற்றுச் சுரப்பு அன்னது என்று அறிவுறுத்தும் சிறப்பினதாம்.

செவிக்கு உணவாம் கேள்விக்கு வாய்ப்பில்லாத போது தான், வயிற்றுக்கு உணவைக் கருதுதல் வேண்டும் என்னும் வள்ளுவர், பெருந்தீனியர் எப்படி எங்கெங்கெல்லாம் எவ்வெவ்வுணவு சுவையாகக் கிட்டுமெனத் தேடித் திரிவரோ, அது போல் கேள்வித் திறங்களைப் பல்லபல இடங்களிலும் தேடிக் கொள்ளச் செவிச் செல்வர் அலைவர் என்றும் கூறுகிறார். இதனைக் குறிக்கும் குறளாகிய,

"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து

"

என்பதற்கு வேறு பொருள் கண்டு மயக்கி விட்டனர்.