உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

பால்வேறுபாடு இல்லாமல் கற்றிருந்தனர் என்பது நன்கு விளங்கும். அக்கால நிலையில்தான், எண்ணும் எழுத்து மாகிய இரண்டு கண்கள் என்னும் கொள்கை உறுதியாக இருந்தது.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு

95

'கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்”

என்னும் குறள் மணிகளைக் காண்க.

அக்கல்வி பதவிக் கல்வி அன்று; வேலைக் கல்வி அன்று; அக்கல்வி மாசறு கல்வி; நிற்கக் கற்ற கல்வி; ஊரெல்லாம் உலகெல்லாம் உறவாகக் கொள்ளச் செய்யும் பண்பாட்டுக் கல்வி; அக்கல்வியும் குறித்த காலத்தளவில் கற்றொழியும் காலக் கல்வி அன்று; சாமளவும் கற்கும் சாவாக் கல்வி கல்வி வெளியே இருந்து புகுத்தப்படுவது அன்று; உள்ளிருக்கும் சுரப்பை வெளிக் கொண்டு வருவது. இதுவே,

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு"

என்பது.

உரையாடுதல் உறவாடுதல் ஒழுகுதல் என்பன கொண்டே, 'இவர் கற்றவர்' 'இவர் கல்லார்' என்பதற்கு எடுத்துக் காட்டாக இலங்கிய கல்வி அது. தாம் அடையும் இன்பத்தை உலகமும் அடைய வேண்டும் என்னும் விருப்பத்தால் ஒவ்வொருவரும் பிறர்க்குக் கற்பித்தலை மேற்கொண்ட கல்வி அது. கற்றவன் எவனோ அவனே கற்பிப்பவனும் ஆகலானும், கற்றுக் கொண்டே கற்பிப்பவனும் ஆகலானும், 'மாணவன்' என்னும் சொல்லாட் சியோ 'ஆசிரியன்' என்னும் சொல்லாட்சியோ குறளில் ல்லையாம்.

கல்விப் பயனை உணர்ந்தமையால்,அக்கல்வியை ஒருமுகப் பட்டுக் கற்ற அருமை 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி' எனப் பட்டது. ஒருமுகப்பட்டுக் கற்கும் கல்வியே அக்கல்வி! அதனையும் நீர் வேட்கையன் பருகு. நீர்க்கு அலாவுவது போலவும்,பசி மிக்கோன் உணவுக்கு அலாவுவது போலவும் ஏக்கமுற்றும் செருக்கு அற்றும் கற்ற சிறப்புக் கொண்டது.