உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பொதுவாழ்வுச் சிக்கல்களும்

தீர்வுகளும்

பொது என்பது தனிவாழ்வும், குடும்ப வாழ்வும் கடந்து விரிவுற்ற குமுகாய-நாட்டின-உலகின-உயிரின முழுதுறு வாழ்வாகும்.

"பொது நோக்கான் வேந்தன் வரிசையாக நோக்கின்." “ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல்”

எனப் தனிப்பார்வை கடந்ததாக வள்ளுவத்தில் 'பொது' பெறும்.

டம்

இந்நாளில் வழங்கும் ஊர், நகர், நாடு, கட்சி, சாதி,சமயம் ஆகிய இன்னவெல்லாம் அடக்கியது இப்பொதுவாகும்.

பொதுக் கூட்டம், பொது நன்மை, பொதுமை என்பனவற்றில் டம் ம் பெறும் பொதுமை விரிவினது இது. ஊர் மன்றம் 'பொது' என்றும், 'பொதியில்' என்றும் வழங்கிய வழக்கு அறியத்தக்கது. கல்வி

எல்லார்க்கும் கட்டாயத் தேவையானது கல்வி. இக்கல்வி 'பொதுக் கல்வி' என்றே வழங்கப்படும்.

எழுத்தறிவின் இன்றியமையாமையே, இந்நாளில் கிளர்ந் துள்ள எழுத்தறிவு இயக்கமாகும். நாகரிக மிக்க காலமாகச் சொல்லப்படும் இக்காலத்திலும், கல்வியறிவில்லார் மிகப் பலர்; கற்றாருள்ளும் கையெழுத்துப் போடும் அளவில் அமைந்தாரும் உளர்; மக்களாட்சி இங்குத் தோன்றிய போது, தேர்தல் விண்ணப்பத்தில் ஒப்பமிடுவதற்காகவே கையெழுத்துப் போட மட்டும் அறிந்தாரும் உண்டு எனின், பிறர் கல்வி பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. கல்வி என்பது ஒரு சில மேட்டுக் குடியினர்க்கே உண்டு என்று இடைக்காலத்தில் ஏற்பட்ட தன்னலக்

கொள்ளையே அதன் மூலம் ஆகும்.

கலைமகள் வழிபாடு செய்து கொண்டு, கல்வியைக் கெடுத்த நாடு இது எனின், நாணத் தக்கதாம். சங்க இலக்கியத்தை மேலோட்டமாகப் பார்ப்பவருக்கும் எத்தொழிலரும் எந்நிலையரும்