உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

ணைந்து வாழ்வில்

ணையக் கூடாதவையாம்.

வை

இல்லாவாழ்வே,

"மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார்'

என்னும் வெற்றி வாழ்வாகும் (7289).

இல்வாழ்வுப் பயன் அறம் என்பதை எண்ணின், "அறம் எனப் பட்டதே இல்வாழ்க்கை'

என்பது விளக்கமாகும் (49); அவ்வில் வாழ்வே, மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இன்பம் வழங்கும் நன்மகப்பேற்றை அருள்கின்றது. அதுவே, துறந்தார், துவ்வாதார், இறந்தார், தென்புலத்தார் தெய்வம் என்பார்க்கெல்லாம் காப்பிடமே ருந்து உய்விக்கின்றது. பயன் கருதா அக்கொடைத் திறமே மண்ணுலகிலேயே விண்ணுலகப் பேற்றை அருள்கின்றது.

"இரட்டைக் கிளவி போல் பிரியா வாழ்வினர்" என்று இணையிலா உவமை சொல்லிய பாவேந்தர் படைத்த குடும்ப விளக்கின் முகப்புத் தொடர்,

"குறளோவியம் குடும்ப விளக்கு”

என்பதை உணரின் சிக்கலிருள் அகன்றோடும்.