உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

263

செய்துவிட விரும்பாத தலைவி, தலைவனுக்கு இல்லாத குறைகளைப் புனைந்தும் இட்டுக்கட்டியும் கூறி விடுகிறாள். இதனைக் கூறும் வள்ளுவம்

"இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவரளிக்கு மாறு”

"தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து”

என்னும் (1321, 1325)

இரண்டறக் கலக்கும் கலப்பே இல்லறச் சிக்கலைத் தீர்க்கும் மாமருந்து என்பதை "நிலத்தோடு நீரியைந் தன்னார்" என்பார் வள்ளுவர்; விண்ணுலக இன்பினும் இவ்வின்பமே உயரியது என்றும் கூறுவார் (1323; 1303) இதனையே,

“உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன

மடந்தையோ டெம்மிடை நட்பு”

என உடலுயிர் உறவாகக் கூறுவார்.

"கருமணியிற் பாவாய் நீ போதாய் யாம் வீழும்

திருநுதற் கில்லை இடம் "

(1123)

எனத் தன் கண்ணின் பாவையாய்க் கருதும் தலைவனும்,

“கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக் கறிந்து”

(1127)

எனத் தன் கண்ணுள் உறையுநராகக் கருதும் தலைவியும் ஒன்றிய வாழ்வில் ஒன்றாதது உண்டா?

ஊடுதலும் அளவுக்கு நீடுதல் ஆகாது. அதற்கும் ஓர் அளவுண்டு. ஊடிய வரை உணர்ந்து கூடுதல் இன்றியமையாத் திறம். அதற்கு மாறாதல்,

“ஊடியவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று”

என்பதாய் முடியும் (1304). இவ்வூடலியல்பே இவ்வாறு போற்றப் படத்தக்கதெனின் பிறவிடங்களில் கொள்ளும் சினம், சீற்றம், வெகுளி, பொறாமை, வஞ்சம், நஞ்சம், போர், பிணக்கு என்பன 'துணை'யோரிடம் கூடுமே? இவையெல்லாம் ஈருடல் ஓருயிர்