உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

இளங்குமரனார் தமிழ்வளம் -39

இருபாற்கட்டு இல்லாமை இக்கட்டுகளுக்கு எல்லாம் மூலமாம். அதன் விளைவே, பிறர்மனை நயப்பும். வரைவின் மகண்மையுமாம். பிறர்மனை நயப்பு ஆண்மைக் குற்றம். வரைவின் மகண்மை பெண்மைக் குற்றம், இவ்விரண்டும் உண்மை, வாழ்வுச் சிக்கல். இச்சிக்கல் தீர்வுக்குவழி ஒத்த உயிர்நேயம் உடைமையாம்.

விரும்புதல் வீழ்தல் எனப்படும் ஒருவர் விரும்பி ஒருவர் விரும்பாமை பிரிவுக்கும் பிணக்குக்கும் இடமாகிப் பிளவுக்கும் வழியாக்கிவிடும். ஆனால் விரும்புவார்க்குத் தக்க விரும்புவார் இணையின் மழைபெய் என்றவுடன் பெய்யும் மழையொப்ப நிறைநலம் பயக்கும். இதுவே,

"வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி"

என்பதால் (1192)

விருப்பமிக்க துணைவிக்கு விருப்பமிக்க துணைவன் செய்யும் அன்பு,உழவர்க்கு வேண்டும் பொழுதில் பெய்யும் மழையைப் போன்றது என்கிறார். மேலும்

"வீழும் இருவர்க்கு இனிதே”

"வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே

வாழுநம் என்னும் செருக்கு"

(1108)

(1193)

என இருவரும் ஒத்து இணைந்த இனிய வாழ்வே பெருமித வாழ்வு என்பார். இத்தகைய வாழ்வே "பெய்யெனப் பெய்யும் மழை", யெனவும் பேசுவார்.

இத்தகைய வாழ்வு வாயாமை,

“வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்"

என வருந்தியுரைப்பார்.

உயிர் தளிர்க்கச் செய்யும் உரிமை வாழ்வை உதறிச் செல்லும் நிலையே, கூடா ஒழுக்கமூலமாகவும், சிவப்பு விளக்கு நிரயமாக வாழ்வுச் சிக்கலாகி விடுகின்றன.

கூடுதல் சிறக்க வேண்டும் எனின் ஊடுதல் வேண்டும். ஏனெனில் ஊடுதல் காமத்திற்கு இன்பமாம். அக்குறைக்கு டமில்லா நிறைவனாக வள்ளுவக் காதல் தலைவன் உள்ளான். டுதல் இல்லாமல் உவகையை உப்புச் சப்பு இல்லாமல்