உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

261

இதற்குப் பெற்றோள் பெற்றோன் பிறந்தோன் என வேற்றுமை இல்லாமல் பங்கு பற்றிக் கொண்டு முளர்! பண்பிலாத் தனத்திற்குப் பண்பாட்டுச் சாயம் வேறு பூசிப் பாதுகாக்கின்ற னர். அறிவறிந்தோர் எண்ணின் இது அயல்நெறியாளர் தந்த அழிவு என்பது வெளிப்படப் புலப்படும்! அதனைப் பேயாய்க் கட்டியழும் பேதையர் இழிமையும் புலப்படும் (தொல்.களவு 1.)

பெண்டிர்க்குக் கையுறை வழங்குதலும், பரிசம் வழங்கு தலும் மணம் புரிந்து கொள்ளலுமே தமிழர் நெறி. அதற்கு அடிப்படையாக அமைந்தது அவர்களின் தொன்னெறி யாகிய காதல்வழிக் கற்பு நெறியேயாம். அந்நெறிவிளக்கமே இன்பத்துப் பாலாம் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் உரிப்பொருள் ஐந்திற்கும் முறையே ஐந்தைந்தாக இருபத்து ஐந்து அதிகாரங்களைக் கொண்டது இன்பத்துப்பால். அந்நெறி போற்றாமல் அயல் நெறிபோற்றிய அவலமே மாப்பிள்ளைக் கொடையாய்ப் பெண்ணினத்தைச் சிதைப்ப தோடு ஆணினத்துக்கும் அழியாக் கறையாக உள்ளதாம்.

குடும்பத் தளிர்ப்புக்கு இன்றியமையாதவை அன்பும் அறனும். அவையே, குடும்பவாழ்வின் பண்பு அன்பு என்றும், பயன் அறன் என்றும் வள்ளுவரால் வகுக்கப்பட்டன. அவ்வன் பில் தளிர்த்தல் இருபாலுக்கும் உரியவை. ஆதலால் சிறை காக்கும் காவல் இருவர்கக்கும் ஆகாது; நிறைகாக்கும் காவலே நேரிய காவலாம்.

“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை”

என்று மகளிர்க்குத்தானே சொல்லியுளார் வள்ளுவர் என வள்ளுவத்தை முழுதுற ஓதினார் வினவார்.

மகளிர்க்கு ஓதி நிறை காவல் ஆடவர்க்கும் வேண்டும் என்பதை பலகால் வலியுறுத்துகிறார் வள்ளுவர்.அஃதிருபாற் பொது என்பது 154, 917, 1138,1251,1254 ஆகிய குறள்களால் வெளிப்படும்.

66

“ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத் தான் கொண்டொழுகின் உண்டு"

என்னும் குறளோ ஆடவர் நிறையை வெளிப்படக் காட்டி விடும்.