உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

273

செலுத்துதல் வேண்டும் என்னும் கருத்தால், துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும், சுற்றத்தார்க்கும் உதவுதலை வலியுறுத்தியது அவ்வள்ளிய உள்ளம்.

துவ்வாதவர் என்பார், துய்ப்புக்கு வழிவகை அற்று ஒடுங்கிப் போய் இரத்தற்காக வெளிப்படாதவர். இறந்தார் என்பார், அத்துய்ப்புக்கு வழிவகை அற்ற நிலையில் வீட்டை விட்டு வெளியேறி வந்தவர். சுற்றத்தார் என்பார், உரிமைச் சுற்றமும், உறவுச் சுற்றமும், தொழிற் சுற்றமும், ஆகிய பலருமாம். இவர்களைப் பேணல் 'சுற்றந்தழாஅல்' என்றோர் அதிகாரப் பொருளாக அமைகின்றது.

“சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்”

என்பதில் அதில் ஒன்று.

இனி, ஈகை என்பதோர் அதிகாரம்,

“வறியார்க் கொன் றீவதே ஈகை

""

எனப் பொருளின்மையே, இன்மையாக் கொண்டு தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது அது.

காணார் கேளார் கால்முடி மாயோர்' முதலோர்க்கு உதவுதல் தவிர்த்து, வறுமையரே உதவுவதற்கு உரியர் என்பது அவர் கொள்கை.

“பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்து ஆள்வினை இன்மை பழி"

என்பதே வள்ளுவம் ஆகலின், பொறியின்மை உதவி பெறுதற் குரியது ஆகாது என்பது தெளிவாகும்.

மேலும் பசியாற்றும் கடப்பாட்டிலும் அப்பசியை மாற்றும் கடப்பாடே நலமிக்கது என்பதை,

66

'ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்”

என வலியுறுத்துகிறார். உணவு உடை உறையுள் என உதவி புரிதலினும் அவற்றைத் தாமே தேடிக்கொள்வதற்காம் வழிவகை களைச் செய்வதே நிலைத்தக்க தீர்வாம் எனத் தொழிலீகையைத் தோற்றுவிக்கிறார் வள்ளுவர். அதனாலேயே,