உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

"இரவார் இரப்பார்க்கொன றீவார் கரவாது

கைசெய்தூண்மாலை யவர்

என வடிவிலே அவர்தம் பெருமித வாழ்வைப் பகர்கிறார்.

ஏனெனில்,

அற்றைப் போக்கிகளை நிறைவு செய்தாலே ஆட்சித் திறமும் வாக்குக் கொள்ளைப் பேற்றுக்கு வாய்ப்புமாம் என்று மானக்கேட்டை வாழ்வாக்கி மதிப்புறும் ஆட்சியர் சூழ்ச்சியை வள்ளுவப் பரப்பாளர்கள் பரப்பிப் பரப்பியே அகற்றுதல் "ஏந்தி வாழ்தல் இழிவன்று; எம்முரிமை என்றும்; ஏந்துவார்க்கு ஈந்தாலே போதும் எம் ஆட்சி தட்டின்றி நடக்கும்" என்றும் ஆளப்படுவோரும் ஆள்வோரும் உறுதிப்பட்டு விட்ட நிலையில் இது தீராக் கடமையாகும்.

வேண்டும்.

ஒப்புரவு

இனி ஒப்புரவு என்பதோ, உயர்ந்தாரும் ஒத்தாரும் தாழ்ந்தாரும் ஒரு நிலையராய் வாழ்தலைக் குறித்தது.

மழை எப்படிப் பொதுப் பொருளோ அப்படிச் செல்வமும் பொதும் பொருளாதல் வேண்டும் என்ற தொடக்க முடையது ஒப்புரவு.

ஊருணி நீர் எப்படி ஊரவர்க்கெல்லாம் பொதுமைப் பட்டதோ அப்படிப் பொதுமைப் பட்டது பொருட் செல்வம் என்றும்,

ஊர் நடுவே பழுத்த பழமரப் பயன்பாடு எப்படி ஊரவர்க் கெல்லாம் பொதுவோ அப்படிப் பொதுவினது செல்வம் என்றும்,

மருந்துமரம் எப்படி நோயர்க்கெல்லாம் இன்றியமையாப் பொதுத் தேவையதோ அப்படிப் பொதுத் தேவையது பொருள் என்றும்,

ஊரறிந்த உவமைகளால் விளக்குவது ஒப்புரவு.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்”

என்னும் குறள், ஒப்புரவின் மேல் வள்ளுவர்க்கிருந்த ஒப்பிலாப் பற்றுமையை வெளிப்படுத்தி விடும்.

ஒப்புரவு ஆக்குவது எப்படி?