உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

275

உழவுத் தொழிலில் செய்யப்படும் ஒப்புரவுப் பணியை அறியின் அதன் செய்வகையும் பயனும் விளக்கமாகும்.

மேடும் பள்ளமும் ஆகிய நிலத்தில் அப்படியே பயிரிட்டால் என்ன ஆகும்? மேட்டுக்கு நீர் ஏறாமல் பயிர் காய்ந்து கெடும்; படும்.

பள்ளத்தில் நீர் கிடையாய்க் கிடந்து அழுகும்; அழியும்.

அம்மேடு பள்ளம் ஒரு சீராய்ச் சமன் படுத்தப்படின் நிலப்பரப்பெல்லாம் விளைநிலமாய்ச் சிறக்கும். இவ்வொப் புரவே செல்வக்குடி, வறுமைக்குடி என்பவற்றை அகற்றி ஒத்தகுடி என்று ஆக்கும்.

மண்ணை ஒருமைப்படுத்தல் முயற்சியால் கூடும். உணர்வும் தன்னலமும் அமைந்த உயிர்ப் பிறப்பிகளை ஒரு நிலைப்படுத்தல் எளிதோ - இயல்வதோ-என உறுதிப்பாட்டாளர் ஐயுறார்.

எந்த ஒரு புதுமையும் உலகம் உடனே ஏற்றுக் கொண்டதா? கோயில் நுழைவைப் பொதுவாக்க உலகம் உடனே ஏற்றதா? பலியை நிறுத்த உடன்கட்டை ஏற்றத்தைத் தடுக்க உலகம் ஒருப்பட்டதா? இது கால் இயல்பாகி விடவில்லையா?

-

உன் குடிப்பிறப்பு என்ன என்று வினவிக் கல்வி நிலையங் களின் உண்டுறை விடுதிகளிலும் பிரித்து வைத்தமை இல்லையா? இவையெல்லாம் இன்று நாணற்குரிய செயல்களாகத் தோன்றவில்லையா?

நாம் இயலுமா என்று வினாவும் நடைத்திட்டத்தைக் காரல்மார்க்கசு கொள்கை வழி வந்த இலெனினார் உருசிய நாட்டில் உறுதிப்படுத்தி விடவில்லையா? அக் கொள்கையை ஏற்றுக் கொண்ட சீனம் முதலிய நாடுகள் உலகில் இல்லையா?

உருசிய நாடு அக்கொள்கையில் இருந்து வழுவிற்றே எனின், அது நடைப்படுத்துவார் தோல்வியே யன்றிக் கொள்கைத் தோல்வி ஆகாதாம். அவ்வாறு கணிப்பின், சமயங்கண்டோர் உரைகள் எல்லாம் சால்புடன் போற்றப்பட்டுக் கொண்டா உள்ளன? 'கூட்டமும் குரலும் இருந்தால் போதும், கொள்கை பற்றிக் கவலை இல்லை புறக்கோலம் மட்டும் போதும்' என்ற நிலையைப் பார்ப்பின், கொள்கையை நடைமுறைப் படுத்துவார் தோல்வி, கொள்கைத் தோல்வி ஆகாது என்பது வெளிப்படும்.