உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

39

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

சரியாகச் செயல்பட்டிருந்தால்-நில உச்ச வரம்பு, நிலக் கொடை இயக்கம் ஆகியவையும் அரசுடைமைத் திட்டங்களும் நன்கு செயல்பட்டிருந்தால்-ஒப்புரவுக்கு வாய்ப்புக் கிட்டி யிருக்கும்.

நிலத்துக்கு உச்ச வரம்புப் பெயரிட்டு அதற்கு எதிரிடையான செயல்கள் விதிவிலக்குகள் எத்தனை நடந்தன?

பணப் பயிர்க்கு விதிவிலக்குத் தந்து பணக்காரர் பக்கம் சார்ந்து நின்ற பழி என்ன?

விளை நிலத்துக்கு உச்ச வரம்பு போலத் தொழிலக வருவாய் மாதச் சம்பள வருவாய் ஆகியவற்றுக்கு உச்ச வரம்பு ஏற்பட்டதா? அவற்றைச் செய்தால், 'ஒப்புரவு' அமைப்பு உண்டாதல் அரிதன்றே! அவ்வொப்புரவு செய்தலால் தன்னை இழப்பினும், தன் ஆட்சியை இழப்பினும் பேறே என எண்ணுவார் வேண்டும் என்றன்றோ வள்ளுவம் பேசுகின்றது! அதுதானே,

"ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து”

என்பது.

பொருள்

பொருட்பால் அளவே வள்ளுவப் பொருளியல் வளம் காட்ட வல்லது. எழுபது அதிகாரம்; எழுநூறு பாடல். அறத்தின் அளவும் இன்பத்தின் அளவும் கொண்டு அதனினும் விஞ்சிய பெருக்க அளவு அது அவ்விரிவில் பொருள் செயல் வகை என்பதோர் அதிகாரமே அப்பெயரை நேராகத் தழுவிய மைந்தது. ஆனால் பொருள் என்னும் சொல்லோ அறுபத்து இரண்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது. அப்பொருள் சுட்டும் வேறு பல சொற்களும் இடம் பெற்றுள.

பொருள் தேடுக; பொருள் சேர்க்க; பொருள் குவிக்க என்று வள்ளுவம் கூறுவதில்லை. "செய்க பொருளை" என்று ஏவும் வள்ளுவம் "செய்க பொருளை" என்பதைக் கடைப் பிடியாகக் கொண்டு திகழும் நாடுகளில் தலையாய நாடு எது? சப்பான் நாடு என்பதை, அதனை அணுவால் அழித்த அமெரிக்க நாடும் அறியும் 'அப்பேரழிவுக்கு ஆட்பட்ட நாடு அவ்வணுவை ஏவிய நாடும் நிமிர்ந்து நோக்க வானுயர்ந்த தோற்றம் செய்வது எதனால்? "செய்க பொருளை" என்னும் வள்ளுவச் சீர்கள் இரண்டற்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது தானே! நம்