உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

277

நாட்டுக்கு உய்யும் நெறி அது என்பதன்று; நானிலம் உய்யும் நெறியே செய்க பொருளை என்பதில் உள்ளது!

பொருள் புண்ணியத்தால் முன் வினைப் பயனால் வந்தது என்பதன்று வள்ளுவம் உலையா முயற்சியால் ஊழையும் வெல்லும் ஆற்றலால் வருவது என்பது வள்ளுவம்.

79

பொருள் நல்லோர் அல்லோர் இருபாலாரிடத்தும் இருத்தல் உண்டு. "பூரியர் கண்ணும் உள என்பார் பொருட் செல்வத்தை! "வைத்தான் வாய்சான்ற பெரும் பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்ததில்" என்றும், “அற்றார்க்கு ஒன்று ஆற்றா தான் செல்வம் மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று" என்று பழிப்புக்ழு இ டனாதல் உண்டு; ஊருணியாய்ப் பழமரமாய் மருந்து மரமாய் மழை வளமாய் மாண்புறுவதும் உண்டு என்றும் கூறுவார்.

பொருள் செயல் வகையில்,

"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்"

எனப் புகழ்வார்.

"இல்லாரை எல்லாரும் எள்ளுவர்"

என இரங்குவார்.

“பொருள் என்னும் பொய்யா விளக்கம்”

எனப் பூரிப்பார்.

66

"அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்"

என்றும்,

"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்”

என்று பொருள் வரும் வழியும் தீமையற்றதாய், அருளும் அன்பும் உற்றதாய் இருக்க வேண்டும் என வலியுறுத்துவார்.

அருளேயும் பொருளாலேயே காக்கப்படும் என்றும்

தெளிவிப்பார்.