உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

பொருள் பகைவர் செருக்கு அறுக்கும் என்றும்,

அறமும் இன்பமும் வழங்கும் என்றும் கூறுவார்.

வாணிகத்தால் பொருள் தேடுவார், அப்பொருளாலேயே அறமும் தேடிக் கொள்ளலாம் என்பதை,

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின்.”

என்பார்.

பொருள் செயல் வகையை அன்றி, 'நன்றியின் செல்வம்' என்னும் அதிகாரத்திலும் பொருளியல் விரிப்பார். அதில் பயன்படாப் பொருளுக்கு இழிவு என்பது பயன்படுத்தான் இழிவு என்பதைத் தெளிவிப்பார். நல்லோன் வறுமையில் செய்யும் நலப்பாட்டையும், அல்லோன் வளமையிலும் செய்யான் என்றும், அவன் வளம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தது ஒப்பது என்றும் கூறுவார்.

"அன்பொரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒய்பொருள் கொள்வார் பிறர்"

அப்பாழோன் செல்வத்திற்குப் பரிந்தும் இரங்குவார். அவ்வள்ளுவப் பொருளியல் நெறி பொருளியல் வல்லாரால் போற்றப்பட்டு ஆள்வார் ஒப்புகையுடன் நடைமுறைப்படின் பொரும்பாலான சிக்கல்கள் ஒழியவே செய்யும்.

தென் புலத்தார்

நாட்டின் தலையாய செல்வங்களுள் ஒன்று அறிவாளர் ஆகிய செல்வம். கூர்த்த அறிவாளரே உலகை இற்றை நிலைக்கு ஆக்கியவர் ஆவர். ஊண், உடை, உறைவிட வளர்ச்சிகளா உழைப்புத் தொல்லையைக் குறைத்தலா, ஏந்துகளை ஆக்குதலா, கருவிகள் கண்டு பிடிப்பா, போக்கு வரவு ஆலை தொழிலகம் கண்ட ஆக்ககங்களா, வீண் செலவா எல்லாம் எல்லாம் அறிவாளராம் செல்வம் வழங்கிய செல்வங்களே!

அச்செல்வங்களின் நிலை இந்நாட்டில் எவ்வாறுள்ளது? இந்நாட்டின் செல்வத்தால் வளர்ந்து வாழ்ந்து, இந்நாட்டு மூளைத் திறத்தால் பயின்று ஓங்கி உயர்ந்து, பிற நாட்டுக்குப் பாடுபடுபவராய், தம்மைத் தாங்கிய நாட்டுக்குத் தம் கடன் செய்யாதவராய் ஆக்குவது எது? மூளையர் பெரும்பாலரும் அயல்நாட்டுக்கு உரமும் ஊற்றமும் உயர்வுமாகி விடுகின்ற