உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

279

இந்நிலைமையை அறிவர் எண்ணுகின்றனரா? சான்றோர் உரைக்கின்றனரா? அரசு சிந்திக்கின்றதா?

'முடத் தெங்கு' என்பது வளைந்த தென்னை, நிற்கும் நிலத்தின் நீரும் உரமும் கொண்டு, பிறர் நிலத்துச் சென்று ஆங்குள்ளார்க்குப் பயன்படும் தென்னையே முடத்தெங்காகும். இந்நாட்டு மூளையரும் உழைப்பரும் முடத்தெங்காகி விடல் ஏன்? அவர்க்கு வேண்டும் ஆய்வகம், தொழிலகம், வேலை வாய்ப்பு இன்னன செய்து தாரா அரசின் குற்றம் தானே! இன்னின்ன செய்து தர நாங்கள் காத்திருக்கும் அவற்றை உதறிவிட்டு நீங்கள் முடத் தெங்காகி விடலாமா? என்று மூளையரையும் உழைப்பரையும் கேட்க இந்நாட்டுக்குத் துணிவு உண்டா? முறைமை உண்டா?

வள்ளுவர் அன்றே எண்ணினார். ஒவ்வொரு குடும்பத் தலைவனும் அறிவாளரைப் போற்றுதல் வேண்டும் என்னு முகத்தால் நாடாள்வோர்க்குத் தீராக் கடடையாவது அது என்பதைக் கூறினார். அது "தென்புலத்தார் ஓம்பல் தலை" என்பதாம்.

தென் புலத்தார் என்பதற்குத் தெளிந்து தேர்ந்த புலமையாளர் என்னும் பொருளை விடுத்து, இறந்தார்க்குச் செய்யும் கடமையாக்கி விட்ட கேட்டினும் கேடு, அறிவாள் ரையெல்லாம் அயல்நாடு தேட விடும் நிலைமை ஆகும்.

மூளைச் செல்வம் மூலப்பொருள் ஒன்றன் மதிப்பை மும்மடங்கு நான் மடங்கா? மூவாயிரம் நாலாயிரம் மடங்கு உயர்த்துவதை உருக்குக் கம்பி, ஒலிப்பெருக்கி ஆக்கப்படுவதால் உண்டாகும் விலை மானத்தாலேயே கண்டு கொள்ள முடியுமே! பிறப்பொப்பு

இனி மக்கட் பிறப்பிலே என்ன வேற்றுமை? சமயம், சாதி, தொழில், நிறம், பணம், பதவி, கல்வி என்பவற்றால் உயர்வு, தாழ்வு கொள்ளல் என்ன முறை? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் வள்ளுவம் நடையிடின் வேறுபாடுகளைச் சுக்கல் சுக்கலாகத் தகர்க்கத்தானே வேண்டும்?

சிறுபான்மையினர் என்பதற்காகக் கட்டற்ற உரிமைகள் சலுகைகள் உண்டாம் தரவும் வேண்டுமாம். அரசும் முறை கடந்து வழங்குமாம். அவர்கள் என்ன மாந்தப் பிறப்பல்லாத் தனிப் பிறப்புக்களா?