உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

எச்சமயம் எனினும் மாந்தப் பொது நிலைக்கு உரியதே. அதற்கு நாட்டியல் ஒருமைக்குக் கேட்டியல் செய்யும் உரிமை இல்லை! அப்படிப்பட்ட தனி உரிமைகளை வாக்குகளை நோக்கியே வைத்துக் கொண்டிருக்கும் மக்களாட்சி மாக்களாட்சியன்றி அறநெறி ஆட்கியாகுமா?

ஒரு நாட்டு மொழிகளுள் ஏற்றத் தாழ்வு காட்டல், மொழிக்கு மொழி வல்லாண்மை கொண்டு அடிமைப்படுத்தல்.

இவ்வெல்லாம் நாட்டியல் ஒருமைப்பாட்டை ஒழித்துக் கட்டுவன என்பது வெளிப்படை.

இவற்றுக் கெல்லாம் ஒத்த ஒரோ ஒரு தீர்வு, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்னும் பெருநெறி போற்றலாகும்.

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறுப்பும் இல்லது நாடு"

என்பது வள்ளுவம். ஆனால் இவற்றைச் சமயத்தின் பேராலும் சாதியின் பேராலும் அரசியல் கட்சியின் பேராலும், தற்சார்பு என்பதன் பேராலும் ஆட்சிக் கட்டிலில் இருப்பாரும், அறிவாளர், சமயத் தோன்றல், துறவர், தலைவர் என்னும் போர்வைக்குள் அல்லவை உள் வைத்துப் புறத்தே நல்லவை காட்டி அமைவாரும், ஊட்டி வளர்த்து நாட்டை உருக்குலைத்து வருதல் கண்கூடு, ல்லாக்கால் நால் வருணம் தக்கதே என்றும், உடன் கட்டை ஏறல் தக்கதே என்றும், பெண்ணுக்கு ஒத்த உரிமை கூடாது என்றும், எத்தனை மகளையும் மணக்கலாம் என்றும், சமயச் சின்னமாகப் படைக்கலம் ஏந்தலாம் என்றும், சிறுபான் மைப் பெயரால், பெரும்பான்மையர்க்கு இல்லாப் பேறெல்லாம் பெறலாம் என்றும் நாட்டு நடைமுறை இருக்கமாட்டா.

ஏமாற்று, அடிமை, வஞ்சம், நஞ்சம், கொள்ளை, கொலை என்பவை எவர் செய்தால் என்ன? அவர் கொண்ட சாதி சமயங்களாலோ, குடிப்பிறப்பாலோ தக்கவை என்று ஆகிவிடுமா? மாந்தப் பொது நோக்கில் குற்றம் குற்றமே என்னும் நடுமை நெறியே போற்றப்பட்டால் அல்லாமல் நரித்தனம் மலியவே செய்யும். தின்பது, இறப்பதற்காகக் கண்ணீர் வடிக்கவே வடியாது. 'தலைவிதி' என்று தப்பித்துக் கொள்வது. தகவு காணவே காணாது, இவ்வெல்லாத் தீர்வுகளுக்கும் ஒரே ஒரு செங்கோல்,