உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்னும் ஒருமைப் பார்வையே யாம்.

சூது

281

பொருள் அழிவுக்கும் புகழ் அழிவுக்கும் ஒருங்கே இடமாக இருப்பது சூதாகும். அது 'முகடி' எனப்படும். மூடிவிடுவது முகடி மூடியாகும். அதன் செயலை,

“அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியால் மூடப்பட்டார்.”

என்னும் வள்ளுவம். அது,

“சிறுமை பல செய்து சீரழிக்கும் சூது "இழத் தொறூஉம் காதலிக்கும் சூது”

66

“ஒன்றெய்தி நூறிழக்ம் சூது”

"பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்” (சூது)

"பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது"

உடை செல்வம் ஊண் ஒளி கல்வி (விலக்கும் சூது)

என்றெல்லாம் சொல்லி வேண்டற்க வென்றிடினும் சூதினை என்று வேண்டிக் கொள்ளப்பட்டது. அச்சூதினைச் 'சூதர்' மட்டுமோ கொள்கின்றனர். அரசே சூது நிறுவனமாகி விட்டது.

-

பரிசுச் சீட்டு சூது இல்லையா? எந்த மாநிலம் பரிசுச் சீட்டு நடத்தவில்லை. தனித்தனி ஆள் போட்டி போட்டு நடத்தும் சூதுகள் எத்தனை? குலுக்கல் சீட்டு, ஏலச்சீட்டு சலுகை விலை, மலிவு விலை என்பனவெல்லாம் சோரும் உள்ளங்களை மயக்கிச் சொத்துச் சேர்க்கும் திட்டங்கள் தாமே. குதிரைப் பந்தயம் என்பது என்ன சூதுர் கழகம்தானே! இவற்றின் விளம்பரங்களாகத் தாமே தொலைக்காட்சியும், வானொலியும் திரைப்படங்களும் திகழ்கின்றன. எத்தனை கோடி குடிகளைக் குடிக்கக் கஞ்சிக்கு இல்லாமல் ஆக்கி ஓரிரு குடிகளை மேட்டுக் குடியாக்குவதுபோல் காட்டுகின்றன. அப்புதுமேட்டுக்குடி, அதற்குமுன் இழந்த இழப்புக் கணக்கை எண்ணியதுண்டா? பலரைத் தாய்ச் சீலையர் ஆக்கி ஒருவருக்குப் பட்டுக் கட்டுவது போல் காட்டும் சூழ்ச்சிப் பரிசுத் திட்டங்களை முனைப்பாக