உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

இருந்து ஒழித்துக்கட்ட வேண்டியதிருக்கவும், அதுவே முனைப்பாக

இருந்து

வளர்க்குமானால்

வேட்டைத்தனமா?

மது

அஃது

ஆட்சித்தனமா?

இனிச் சூதுபோல் விலக்கத்தக்க ஒன்று மது மதியை மயக்கி மக்களை மாக்களாக்கும் மதுவை வழங்குதல் அரசுக் கடமை யாகுமா?

"குடி குடியைக் கெடுக்கும்" என்று சொல்லிக்கொண்டே மது ஆலை உருவாக்கல் - மது விற்பனையகம் திறத்தல் - குடிக்க வாய்ப்புச் செய்து தருதல் குடியரைத் திருத்தவும் மருத்துவம் செய்தல்- இவையெல்லாம் என்ன?

-

நச்சுயிரிகளைப் பரப்பித் தொற்று நோய்களைப் பெருக்கும் கொலைஞன் ஒருவனே, உயிரிரக்கம் உடையான் போல் தொற்று நோய் மருத்துவனாகப் பொய்ம்முகம் காட்டும் போலித்தனம் தானே அது.

கேடு தருவன எவை எனினும் உருவாக்கம் இல்லாமலே தடுக்க வேண்டும்! கரவிலே உருவாக்கம் செய்யப்பட்டிருப் பினும்,ஊருக்கும் நடமாட்டம் கொண்ட அளவிலேயே கண்டு கையும் களவுமாகப் பற்றி உரிய தண்டனை வழங்கித் தடுத்திருக்வேண்டுமே! அவற்றைச் செய்யத் திறமில்லாமல் குடி குடியைக் கெடுக்கும்' எனப் படம் எடுத்தால் அதற்கும் பாம்பு படமெடுப்பதற்கம் என்ன வேற்றுமை?

"ஈன்றாள் முகத்தேயும் இன்னாது"

“நஞ்சுண்பார் கள்ளுண்பார்"

“உட்கப்படாஅர்; ஒளி இழப்பர்'

“உள்றொற்றி உள்ளூர் நகப்படுவர்"

என்றெல்லாம் மதுத்தீமையை வள்ளுவம் எடுத்துக்காட்டுகிறதே! "நீ மது உண்டபோது எப்படி இருப்பாய் என்பதை நீ அறிய வேண்டுமா? நீ தெளிவோடு இருக்கும்போது மதுவுண்டவன் நீ மயங்கிக் கிடக்குட்ம் நிலையையும், செய்யும் செயலையும் கண்டாலே புலப்படும்" என்று தெளிவு காட்டிக் கூறியும், அதனைத் தெளிவாக அறிந்து கொண்டவர்களும் குடிக்கும் உரிமை வழங்குவது குடிகெடுப்பதல்லாமல் என்ன ஆகும்? குடி கெடுக்கவோ இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.