உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

“முகநக நட்பது நட்பன்று”

என்று நட்பியல் கூறும் வள்ளுவம்.

"நிறைநீர நீரவர் கேண்மை'

66

“அகநக நட்பது நட்பு”

என்று மெய்ந்நட்புத் தன்மை கூறும்.

தகவில்லாத் தனத்தில் சொல்லுங்கால் இடித்துக் கூறித் திருத்துவது நட்பிலக்கணம் என்றும் கூறும்.

'உண்மை நட்பு இது' என்பதை அளந்து காட்டும் அளவுகோல் வறுமையும் துன்பமும் ஆகும் கெடு பொழுதே என்றும் கூறும். அத்தகைய வேளை கேட்டிலும் வாய்த்த நற்பொழுது என்றும் இயம்பும்.

நட்பிற் பிழை பொறுக்கும் பழைமை, கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமையது, எனப் பாராட்டுப் பெறும்.

வினைவேறு சொல்வேறுபட்டார் நட்பைக் கனவில் காணிலும் துன்பமேயாம் என்று விளக்கும்.

முகத்தால் இனியராய், அகத்தால் வஞ்சராய் இருப்பார் நட்பு அஞ்சப்படும் என்னும் வள்ளுவம்,

"பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்”

என வழிகாட்டும். மனம் மொழி செயல் ஆகிய மும்மையும் ஒருமையாகத் திகழவேண்டும் என் வலியுறுத்தும் வள்ளுவமே, முகம் நட்டு அகம் நட்பு ஓரீஇ என்பது பெருந்தற்காப்பும். இருபாலும் நலம் சேர்ப்பதுமாம்.

இது,

“தொழுதகை யுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அமுதகண் ணீரும் அனைத்து’

என்பதால் விளக்கமாம்.

சான்றாண்மை

""

குடிமை,மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை என்னும் தொடர் (96-100) சான்றாண்மைச் சார்பினை. சால்பு-