உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும் “பிறர்நாணத் தக்கதுதான் நாணான் ஆயின்

அறம்நாணத் தக்க துடைத்து”

287

என்று அறம் நாணிக் கவிழ்தலைச் சுட்டு நாணுக் கொள்கிறார். ஆனால் பொதுநிலை இற்றை நிலையில் எவ்வாறுள்ளது?

தீமையும், கொடுமையும், வஞ்சமும், நஞ்சமும், பொய்மை யும், கரவும், கயமையும் செய்வார், நன்றி மறப்பார் அறம் துறப்பார், கையூட்டுப் பெற்றார் ஊரறிய நேர்ந்த போதும் நாணுதல் உண்டோ? உண்டோ?

நாளிதழ், கிழமை இதழ், திங்கள் இதழ் இன்னன படத்துடன் வெளியிடினும் நாணுதல் உண்டோ? உண்டோ?

66

இது செய்தான்; இழிஞன் இவன்" என்றால்

இது செய்யான் எவன்?' எனத் தலை நிமிர்ந்து வினாவுவான், அவனுக்குப் பாராட்டு எடுப்பான். அவன் காலில் வீழ்ந்து வணங்கித் தெய்வமாக்குவான் நாண் பிறவிதானா? நாண்வேலி அழிக்கப்பட்டபின் நல்விளைவு உண்டா? வள்ளுவ நாணுடைமை நாட்டுலாக் கொள்ளும் நாளே நல்லவை உலாக் கொள்ளும் நாள்.

நட்பு

நட்பு என்பது நெருக்கப் பொருளது நள் + பு. நட்பு, காதல் நெருக்கம் ஒப்பது நட்பு நெருக்கம். அக் காதல் நெருக்கத்திலும் சிக்கல்கள் பல உண்டு. தன்னை முற்றாக இழந்து கரைந்து போகும் காதலிலும் சிக்கல் உண்டெனின் நட்பைப் பற்றி நவில வேண்டுவதில்லை.

நட்புப் பற்றி வள்ளுவம் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு கூடாநட்பு என ஐந்ததிகாரங்களை ஒரே தொடராக வகுக்கும் (79-83). இவை அன்றியும் சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைக் கோடல் என்பனவும் இவ்வழிப் பட்டனவேயாம்.

நட்பை இத்துணை விரிவாகக் கூறுவானேன்? பொதுச் சிக்கல் பலவும் நட்பு வகையால் தோன்றி அலைக்கழிப்பதாகவும், அச்சிக்கலை அகன்று ஒழிவதாகவும் இருப்பதாலேயே அத்தகைய விரிவும் விளக்கமும் வேண்டிய தாயிற்றாம்.

"நகுதற் பொருட்டன்று நட்டல்'