உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

இளங்குமரனார் தமிழ்வளம்

39

பள்ளத்து வீழ்ந்தார் மேட்டுக் குடியர் மேல் என்ன எண்ணம் கொள்வார்? அவர்க்கு அரணமாக -பாதுகாப்பாக இருப்பாரைப் பற்றி என்ன நினைப்பார்?

அதனால் அத்தகைய ஆட்சியையும் நிலையையும் ஒழித்தால் அல்லாமல் உலகத் துயர் தீராது என்பதால்,

“கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை”

என்றார். அதற்கு ஒரு தாண்டி

66

"கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை”

என்று தீர்வும் கூறினார்.

நாணுடைமை

(870)

இனி நாணுடைமை என்பதோர் அரிய பண்பு. அதனை மகளிர்க்கே உரிமையாக்கிக் கூறுவார் கூற, வள்ளுவரோ ஆடவர்க்கும் மகளிர்க்கும் அப்பண்பு பொதுமையது என்பதை உறுதியுறக் கூறினார்.

“கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல்

நல்லவர் நாணுப் பிற”

என்பது அது. அவ்வொரு குறளோ உரைத்தார்?

நாண்மிக்க நங்கை தன் நாண் துறப்பை இன்பத்துப் பாலிலே மொழியும் நம்மறைத் தோன்றல் வள்ளுவர், பொருட் பாலிலேயும் 'நாணுடைமை' என்றோர் அதிகாரமே வைக்கிறார், “நாணுடைமை மாந்தர் சிறப்பு”

“நாண் என்னும் நன்மை குறித்தது சால்பு"

66

"நாண் அணி”

“நாணுக்கு உறைபதி”

என்றெல்லாம் சிறப்பிக்கிறார்.

நாண் அகத்தில் இயக்கம் நாணால் (கயிற்றால்) இயங்கும் மரப்பாவை இயக்கம் என்கிறார்.