உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

285

என்னும் உண்மையை உணர வேண்டுமே! அவ்வாழ்வுக்குத் தடையும் இடைக்கேடும் தாங்காத் துயரும் உண்டாய தால்தானே வலிய பாறையாய் இறுகிப் போயினர்? வாழ்வா சாவா என்னும் நிலையிலேதானே வாழ்வதற்காகச் சாவை மேற்கொள்ளலாயினர். அது தன்னலமா, பொதுநலம் போற்றிக் கொள்ள முடியாத இக்கட்டால் மேற்கொண்ட முடிவா? இவற்றைச் சுட்டிக் காட்டினால், வன்முறையாளர் போராடிகள் எனப்படுவார், ஆளும் கொடுமையாளர்களாலும் வஞ்சத் தலைமையர்களாலும் அதிகார வல்லூறுகளாலும் அந்நிலை தவிர வேறு வழியில்லை என்னும் கொடு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களேயாம்!

ஒரு பெண்மணி, பூலான்தேவி; கொள்ளைக்காரி கொலைகாரி என்பார். அவளை அந்நிலைக்கு ஆக்கியவரைக் கொள்ளைக்காரர் கொலைகாரர் கயவர் என்று குற்றம் சாட்டாமல் பணக்காரர் பதவியர் மேட்டுகுடியர் என்பதால் சட்டப் பாதுகாப்பும் சால்புப் பாதுகாப்பும் தந்தமையால்தான் என்பதை நினைக்க வேண்டும் அல்லவோ?

“தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து”

என்னும் வெருவந்த செய்யாமைத் தலைக் குறளைத் தலைமேல் தாங்கிய அரசும் தலைமையும் அதிகாரமும் உண்டாயின் மெய்யாக நாட்டில் வன்முறை தலைதூக்கியிருக்கவே மாட்டா. ஆனால் இவ்வுண்மை மரத்துப்போன மனத்திற்குப் புகுமா? தோட்கப் படாச் செவிக்கு ஏறுமா?

ஒரு புலவுக் கடையிலே உள்ள கறித்துண்டு ஒன்றைக் தெரு நாய் என்று கவ்விக் கொண்டு ஓடுகின்றது. இன்னொரு துண்டைப் பருந்து ஒன்று பற்றிக் கொண்டு பறக்கின்றது.

பறக்கின்ற பருத்தைக் கன்னந்தட்டிப் பார்த்து விட்டு, ஓடுகின்ற நாயைக் கட்டைத்தடி கொண்டு வெருட்டி வெருட்டியாடிக்கிறான் புலவுக் கடைக்காரன்.

பருந்தும் நாயும் செய்தவை ஒரே பிழை.

ஆனால் தண்டனை ஒன்றற்கு;

மேனோக்கு பார்வை.

மற்றொன்றுக்கு

மேட்டுக் குடியினர்க்கும் பள்ளத்து வீழ்ந்து கிடப்பார்க்கும் கிடைக்கின்ற நடைமுறை வேறுபாடு இத்தகைத்து. இந்நிலையில்