உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.

என்பது அது.

66

"அஞ்சுவதோரும் அறனே”

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம்”

என்பவற்றைச் சுட்டும் வள்ளுவத்தால், அஞ்சுவது அஞ்சாமைக் குரியதும் வெளிப்படும்.

“அச்சமே கீழ்களது ஆசாரம்"

என்னும் வள்ளுவம் பேசும். இற்றை நிலையில் எந்த நல்லவரேனும் அஞ்ச நிலையராக நாட்டில் நடமாட முடிகின்றதா? எத்தனை எத்தனை அச்சங்கள்?

66

“அச்சம் உடையார்க்கு அரணில்லை”

என்னும் இற்றை நிலைமைதானே அச்சத்தின் மூலம்! அஞ்சி அஞ்சிச் சாக அவலம் சூழும் நிலைமை நாட்டை அலைக் கழிப்பதை நாள் தவறாமல் செய்தித்தாள்கள் படம்பிடித்துக் காட்டவில்லையா?

"வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்”

-

என்றாரே வள்ளுவர். வெரு வந்து வேகாத நல்லோர் ஒருவர் இற்றை நிலையில் இருப்பரா? அமைதியர்க்கு அறவர்க்கு தொண்டர்க்கு அருளர்க்கு பாதுகாப்பு உண்டா? வெளியே வந்தவர் வீட்டுக்குத் திரும்புவார் என்பதற்கு உறுதி ஏதாவது உண்டா? சட்டமன்றம் நாடாளுமன்றம் என்னும் அரணுக்குள் உள்ளாருக்குமே பாதுகாப்பு இல்லை என்றால் ஏனோ தானோ என வாழும் ஏழை எளியவர்க்குத் தாதா பாதுகாப்பு?

இனி, நாட்டில் வன்முறைகள் தலைதூக்கி விட்டன; அலை கொலைகள் பெருகி விட்டன; குண்டு நாகரிகம் உண்டாகி விட்டது என்பார் உளர் எனின், அவர் எண்ணிப் பார்த்தல் வேண்டும். பிறக்கும் போதே வன்முறையாளராய் - போராடிய ராம் - தற்கொலைப் படைஞராய் பிறந்து விட்டனரா? அவர்க்கு என்ன நெஞ்சம் என்பது இல்லவே இல்லையா? அவர்களுக்கும் பெற்றோர் மனைவி மக்கள் சுற்றம் என்பன இல்லவே இல்லையா? வாழவே விரும்பாமலா போய் விட்டனர். நல்வாழ்வு வாழவே - அனைவரும் ஒருமித்த நல்வாழ்வு வாழவே விரும்பியவர் அவர்