உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

என்னும் வள்ளுவங்கள் சொல்லும் சான்றாண்மைக் கடமை களைச் சான்றோர் விட்டனர். சான்றவர்தம் சான்றாண்மைப் பண்மைப் பறி கொடுத்தனர். பிறரைப் போலவே தந்நலத்தாராய் அவ்வப்போது கிட்டும் சிறு நலங்களைச் சிந்தித்து வாழத் தொடங்கினர். நாடு அழிவுக்கு வழி கொண்டது! தலைமைகள் செருக்குத் தலையாட்டம் கொண்டன! அவர் வழிஞர்கள் இழிஞர்களாகச் சூழ்ந்து நாடு வீழ்ந்து கெடும் வழிக்கு வித்தும் விளையும் ஆயினர். வள்ளுவர் வழிச் சான்றோர் வையகக் காவல் பொறுப்பைக் கடனாகக் கொள்ளல் கட்டாயத் தேவையாகும். குடிபடை

பொருட்பாலின் முதல்பாடல் ‘படை குடி' என எண்ணும். இப் 'படைகுடி' என்பவை 'முடி படை' என்னும் பொருள் சிறந்து நிற்கும்.

'நாட்டுப் பணிக்கென வீட்டுக்கு ஓராள்" என்று முரச றைந்து கூட்டம் கூட்டிய காலநிலைச் சான்று குடிபடை என்பது.

<<

"குடிகள் அனைவரும் படைகள்; படைகள் அனைவரும் குடிகள்" என்னும் விளக்கமே 'குடிபடை' என்பதாம்.

பல்வேறு நாடுகளில் இன்ன அகவையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் படைப் பயிற்சியும் படைக்கடமையும் உண்டு என்றிருத்தல் கண்கூடு.

குடிகள் தத்தம் கடமை புரிந்து கொண்டிருப்பர். நாட்டுத் தேவையுண்டாயின் அதற்கு முந்து நிற்பர். அந்நிலையைக் கருதி உருவாக்குதல் வேண்டும்.

படைக்குரிய போர்க்காலம் ஒழிந்த காலத்தில் ஆக்கப் பணிக்கு அப்படையைப் பயன்படுத்துதல் ஆக்கச் செயலாம். யானையைக் கட்டிப்போட்டுப் பயன் என்ன? மலைத் தேக்கை மலையாது இழுத்து வரும் அவ்வானையைத் தளையிட்டுக் கவளம் போட்டு வாளா வைத்திருப்பின் பயன் என்ன? அதற்கும் கேடு. பொது நலத்துக்கும் கேடு. ஆதலால் படை ஓர் கங்கை காவிரித் திட்டம்; அணைத் திட்டம்; சாலை அமைப்புத் திட்டம் என்னும் ஆக்கத் திட்டங்களில் ஈடுபடுத்தப் படவேண்டும்.

'குடிபடை' ‘படைகுடி' என்பவற்றின் பொருள் உணர்ந்து போற்றவே வீணடிப்புச் சிக்கல் நீங்கி விழுமிய நலத்திட்டங்கள் வெற்றியுற வாய்க்கும்.