உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

291

இன்னும் எண்ணிலாச் சிக்கல் தீர்வு எண்ணிப் பார்ப்பார்க்கு வள்ளுவத்தில் இழையோடிக் கிடத்தல் அறியவரும் எடுத்துக் காட்டாகக் கூறப்பட்ட சிலவேயாம்.

66

'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்”

இறை நலம்

வை

இறையுணர்வு நலம் பயக்கும் கருவி. ஆனால் அதன் சமயப் பிரிவுகள் இந்நாளில் நேருக்கு நேர் மோதலும் முட்டலு மாய்க் காட்சி தருகின்றன. இது பண்டும் உண்டு எனினும் இந்நாளில் வாலுருவு புலியாய் வாயுருமிக் கிளர்ந்துள்ளன. இதன் கேடு அகல்தற்கு உலகம் தழுவிய அளவில் வாய்த்த ஒரோ ஓர் அமிழ்த மருந்து திருக்குறளேயாம். அது எச்சமய வாணர்க்கும் ஏற்புடைய பொது நூலாக விளங்குதல் கண்கூடு. அஃது ஏன்? சமயங் கடந்த பொது நூல் என்பதாலேயே யாம்.

திருக்குறள் கூறும் இறைமை, பகுத்தளிப்பு, தூய அறிவு, மலரினும் மென்மை, விருப்பு வெறுப்பு இன்மை, மயக்கம் இன்மை, பொறிவாயில், ஐந்துவித்தால், உவமை இன்மை, அறப்பெருக்கம், உயர் குணப்பேறு, ஈடேற்றல் என்பன வெல்லாம் எச்சமயத்திற்கு ஆகாதவை?

இப்பண்புகள் எங்கெங்கெல்லாம் திகழ்கின்றனவே அங்கங்கெல்லாம் இறைமை உண்டெனின் முட்டலும் மோதலும் உண்டோ? பிணக்கும் உண்டோ? இல்லை, ஆதலால் விரிந்து உலகப் பொதுமை உயிர்ப்பொதுமை வழிப்பட்ட திருவள்ளுவ இறைமையே எந்நாறும் உலகை உய்விக்கும் என்பதை உலகம் உணர வேண்டும். குறள் கற்றார் உலகுக்கு உணர்த்தவும் வேண்டும்.

உலகம் உணர்ந்து திருக்குறள் இறைமை வழியில் திருக்குறள் அறநெறியில் இயலத் தொடங்குமெனில் சிறுமை நீங்கும், போர்மை விலகும்; அருண்மை சுரக்கும்; அமைதி ஊன்றும்;

திருக்குறள் பிறந்த மண்ணிலேயே அத்தன்மை ஊன்ற வில்லையே என்பார் உளர் எனின், திருக்குறள் இறைமை நூலாய்-சட்ட நூலாய்-வாழ்வு நூலாய் ஆக்கப்படாமல் புகழ் நூலாக மட்டுமே கொள்ளப்பட்டு வருவதால் அதன் தன்னேரில்லாக் கொடையைத் தமிழகம் கொள்ள வில்லையாம். அதனைத் தேசிய நூல் என்று ஏற்கவும் முடியாத அரசாண்மையில் அதன் பயன்பாடு மதிக்கவோபடும். உலகத்