உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு

திருக்குறள் வழி ஒப்புரவமைந்த நாட்டின் பேறு

1) உழைப்பு இல்லாமல் பொருள் சேர்க்கும் வழிகளை அகற்றல் வேண்டும்.

2) உழைப்பவர்க்கு உணவு இல்லை என்னும் நிலை இருக்கவே கூடாது.

3) ஒருவன் தனி வாழ்வுக்காக இரத்தலும், அவனுக்கு ஈதலும் சட்டப்படியான குற்றமாக்கப் படவேண்டும்.

4) பொது நலப்பணிக்குப் பொருள் திரட்டலும், கொடுத்தலும் போற்றிப் பாராட்டப்பட வேண்டும்.

5) கண்மூடி வழக்கத்தைத் தூண்டும் காட்சியும் பொழிவும் கட்டாயம் தடுக்கப்படவேண்டும்.

6)

அடிமைப்படுத்தும்

மாந்தனை மாந்தன் தாழ்த்தி எவ்வழக்கத்தையும் அடியோடு அகற்ற வேண்டும்.

7) பிறப்பால் உயர்வு தாழ்வு எண்ணப்படாத நிலையும், செய்யும் தொழிலால் உயர்வு தாழ்வு கருதப்படாத நிலையும் இருத்தல் வேண்டும்.

8) கல்வி என்பது பண்பாட்டுக்கும் தொழில திறத்துக்கும் உதவும் கருவியாக இருக்கவேண்டுமேயன்றி, அலுவல் தேடும் கருவியாக இருத்தல் கூடாது.

9) தனிக் குடும்பம் எனினும் கூட்டுக் குடும்பம் எனினும் எல்லை இல்லாமல் நிலம்புலம் சொத்து வைப்பு எனப் பொருள் குவிப்பகமாக இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட அளவினதாக இருத்தல் வேண்டும்.

10) மயக்கும் குடிவகைகள், பொருள் பறிக்கும் களியாட்டங்கள், பரிசுச் சீட்டுகள் ஆகியவை முற்றாகத் தடுக்கப்படவேண்டும். 11) படைத்துறை, காவல் கடனோடு, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் தொழிலியக்கமாகவும் விளங்குதல் வேண்டும். 12) ஏற்றுக் கொண்ட திட்டத்தை முற்றாக நிறைவேற்றும் ஆளுமை அரசே அரசெனத் தொடரும் வகையில் மக்கள் விழிப்புடையவராக விளங்க வேண்டும்.