உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

கூட்டிச் சேர்த்து இரண்டாயிரத்து முந்நூற்று ருபத்தைந்து ரூபா, எட்டணா, ஒன்பது காசு" என்று கூறினார். செல்வருக்கு வியப்புத் தாழவில்லை. ஏனென்றால் இதற்கு முன்னும் ஏறக் குறைய இவ்வளவு கட்டி வந்ததாக அவர் நினைவு! தமக்குரிய வரிப்பணம் இவ்வளவு என்று தாமே அறியக் கூடாத நிலைமையில் இருக்கும்போது 'ஒரு ரூபாச் சம்பள இளைஞர்' தெளிவும் திருத்தமுமாகக் கூறியது வியப்பாக இருக்காதா?

தாசில்தார் இளைஞரைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார். இவ்வளவு நினைவாற்றலும் நுண்ணறிவும் உடைய இச்சிறுவன் எதிர்காலத்தில் முன்னுக்கு வரத் தக்கவனே என்று எண்ணினார்.

அவர் சிந்தனை கலையுமாறு செல்வர் கூறினார்: "ஐயா, கணக்கு ஏறக்குறையச் சரியாகவே இருக்குமென்று கருதுகிறேன். இப்பொழுது இவன் சொல்லிய தொகையைத் தங்களிடம் கட்டி விடுகிறேன். கூடுதல் குறைதல் இருக்குமானால் சரிபார்த்துக் கொள்வோம்" என்று பணத்தைக் கட்டிவிட்டுப் புறப்பட்டார்.

தாசில்தாருக்கு, இளைஞர் முன்னேற்றத்திற்கு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் அரும்பியது. இவ்வேளையிலே மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது.

அடுத்திருந்த ஓர் ஊர்க் குளம் உடைந்து பெருஞ்சேதமாகி விட்டது. ஊரார், தாசில்தாரிடம் உதவி வேண்டி ஓடி வந்தனர். சேதம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க வேண்டியதுடன், உடைப்பினை அடைக்க எவ்வளவு செலவு ஆகும் என்றும் கணக்கு எடுக்க வேண்டியது தேவை ஆகிவிட்டது. அதற்காகத் தம் அலுவலகத்திற்கு ஆள் அனுப்பி எவரேனும் எழுத்தர் இருந்தால் அழைத்து வருமாறு ஏற்பாடு செய்தார். அது காலைப் பொழுதாக இருந்த காரணத்தால் அங்கு எவரும் வந்திருக்கவில்லை. ஆனால் தற்செயலாக ஒரு விளம்பரத்தினைப் படித்துக் கொண்டு அங்கு நின்றார் நம் இளைஞர். அவர், அலுவலகத்திற்கு வந்த ஆள் வழியாகச் செய்தியினை அறிந்து கொண்டு தாசில்தாரிடம் சென்றார். தாம் கணக்கு எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறி, உடைந்த குளத்திற்குச் சென்று கணக்கெடுத்துக் கொண்டு வந்தார். தாசில்தாரின் அனுபவம் ளைஞர் கணக்குச் சரியாக இருக்கக்கூடும் என்பதை உறுதி செய்தது. இருந்தாலும் தெளிவாக்க விரும்பினார். அலுவலகத் தலைமை எழுத்தர் வந்தவுடன் அவரை அனுப்பிக் கணக்கு எடுத்து வருமாறு பணித்தார். அவர் கணித்து வந்த கணக்கும்