உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார்?

8. நிறுத்து போரை

மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்க நிற்கின்றார்கள்; யார்?

தந்தையும், மைந்தரும்!

ஏன்?

தாய் நெஞ்சிற்குக் காரணம் உண்டு; பேய் நெஞ்சிற்குக் காரணம் உண்டோ?

தீய பழக்கம், தீயோர் உறவு, தெளிந்த அறிவின்மை, தூண்டுதலைக் கேட்கும் மனம்,துடிக்கும் உணர்வு போதாவா பகைத்து நின்று பழி செய்ய!

வை

நல்லவன் தந்தை வல்லமையும் அவனுக்கு மிகவுண்டு; அறநெறிக்கு அஞ்சுபவன் அவன்; மறப்போருக்கு அஞ்சாமையும் அவனுக்கு இயல்பு; அமைதி வாழ்வை விரும்புபவன் அவன் அடக்குமுறைக்கோ அழிசெயலுக்கோ உடன்பட்டறியான்; உடன்படுவோரையும் விடான்; கொற்றவன்தான் அவன் என்றாலும் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகக் காப்பான் குறை கண்டானோ கொதிப்படைவான்!

இத்தகைய நற்பண்புத் தந்தையும், தீமையே வடிவான மைந்தரும் போர்க்களத்தில் நிற்கின்றனர். யானையும், குதிரையும், தேரும் காலாளும் தத்தம் கடமைகளை ஆற்றுதற்குக் காத்திருக் கின்றன. ஏவிவிட்டோர் இறுமாந்திருக்க ஏனையோர் ஏங்கியிருக்க, ஆணையை எதிர் நோக்கிக்கொண்டு இருக்கின்றன இருதிறப் படைகளும்.

வயலிலே நெல்லைப் பயிரிட வேண்டா; கட்டிக் காவல் புரிய வேண்டா; களை எடுக்கவும் வேண்டா; நீர் பாய்ச்சவும் வேண்டாம்; புல்லைப் பயிரிட வேண்டும்; பொருந்தும் உரம் இட வேண்டும்; பொழுதும் சென்று போற்றிக் காத்தல் வேண்டும் என்று கூறுவது புன்மை யல்லவா! இத்தகு புல்லியர்களும் உள்ளனரே நாட்டில்; அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் இருக்கின்றனரே" என்று அறிவுடையோர் வருந்துகின்றனர்.