உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

23

கடியலூர் உருத்திரங் கண்ணன் அந்நூலுக்காகப் பெற்ற பரிசில் பதினாறு நூறாயிரம் பொன்! ஏனையோர் பெற்ற பரிசு? எவர்

கண்டார்?

இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த அவன், மக்கள் வாழ வாழ்ந்த அவன், இன்றும் வாழ்கின்றான் நல்லோர் உளத்தும், காவிரிக் கல்லணையில் நிற்கும் கல்யானை மீதும்!

கல்யானை மீதிருக்கும் அக் காவல் யானையாவன்? அவனே கரிகாலன்! வாய்ந்த துணை நலமும், வளர்ந்த வினை நலமும் ஒருங்கெய்திய சோழன் கரிகாலன் புகழ் வாழ்க!

66

“துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாம் தரும்.

97