உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

கண்ணீர் சிந்தியும் என்ன பயன்? வீரமிலா நாய்கள்! பேடிப் பதர்கள்! என்று வருந்துகின்றார்.

அரசவையில் நிறுத்தி இழிவு செய்ய முனைந்த போதும், அரசர், அமைச்சர், அறிவோர், வீரர் எவரெவரோ இருக்கின்றார்; இருந்தும் தீங்கு தடுக்கும் திறமிலேம் என்று தலை தாழ்ந்து இருக்கின்றனர்.

பாரதியார் பெண்மை வாயார்

பாஞ்சாலி வாயால்

கேட்கின்றார்.

"மங்கியஓர் புன்மதியாய் மன்னர் சபைதனிலே

என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்லுகிறாய் நின்னை எவரும் நிறுத்தடா என்பதிலர் என்செய்கேன்"

சிறியவர் செய்யும் சிறு பிழைகளைத் தடுக்க ஓடி ஓடி வரும் மக்கள், பெரியவர் செய்யும் தவறுகளைத் தடுக்க முன்வர அஞ்சுகின்றனர் அல்லவா! தவறு செய்தவர் எவராயினும் தட்டிக் கேட்கும் உரிமை, உரம், உறுதி எந்நாட்டில் ஏற்படுகிறதோ அந்நாடுதான் உரிமை நாடு; நாகரிக நாடு; உயர்ந்த நாடு! திருத்தி வாழுதற்கும் வழிவகை செய்யும் நாடு!

இத்தகைய சீரிய நாடுகளுள் தலையாய ஒன்றாகத் திகழ்ந்தது தமிழகம், சங்க காலத்தில்! அதற்குச் சான்றுகள் மிகவுள; ஒன்று காண்போம்!

ஆடி வரும் மணி; அசைந்து வரும் யானை;கூடி வரும் கூட்டம்; குமைந்து வரும் உள்ளம்; தேடி வரும் சிறுவர்; திகைத்து நிற்கும் நெஞ்சம்; வீர மிகு வேந்தன்; வெற்றி மிகு படைகள்; அழுது நிற்கும் மாதர்; அமைந்து நிற்கும் ஏவலர்! - ஒரு கொலைக் களத்தின் சிலச் சில பக்கங்களில் காணப்பெறும் காட்சிகள்!

-

'ஏவு யானையை' அரசன் குரல்! 'எங்கே' - அப்பாவி மக்கள் சிலர் குரல்! 'ஐயோ -ஐயையோ' - பொறுக்க மாட்டா ளமனத்தின் கதறல்! "இந்தப் பிள்ளைகளை மிதித்துக் கொல்லவா?" -ஏக்கமிக்கோர் உரை! 'இந்தச் சிறுவர்கள் என்ன கொடுமை செய்தார்கள்; பாவம் ஏதும் அறியாதவர்கள் அல்லவா! பெருங்கொடுமை அழுகையால் நீதி பெற எண்ணினோர் அவல உரை! "யாராவது துணிந்து தடுக்க மாட்டார்களா? இப்படிக் கொடுமை நடக்க விடலாமா?"தாம் மனிதர் என்பதைத் தாமே நம்பாமல் எவருக்காவது மனிதப் பதவி

-