உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

29

தர முயல்வோர் இரங்கல் உரை! “ஐயையோ! காரியின் மைந்தர் அல்லவா! வள்ளல் காரியின் மக்களுக்கா இக் கதி நேர வேண்டும்? எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் விரிவு இல்லாமல் ‘காரி’க்காகத்தான் கண்ணீர் வடிப்பவர் - இரக்கத்தை ஒரு பாதை வழியே போக விட்டவர்கள் அதிலும் துணிவு இல்லாதவர்கள்; நைவுரை! - களத்தில் எழுந்த ஒலிகள் இவை!

இவர்கள் ஒலி வேந்தனுக்குக் கேட்கவில்லை; கேட்க வேண்டுமென்று இவர்கள் கூறவும் இல்லை; கேட்டுவிட்டால் வேந்தன் என்ன நினைப்பானோ என்று ஏங்கிக் கொண்டிருந் தவர்களும் இல்லாமல் இல்லை! மனத்தை அடக்க மாட்டாமல் ஏதோ புலம்பிவிட்டார்கள்; அவ்வளவே! அரசன் துணிந்து தன் செயலை ஆற்றத் தொடங்கினான். "பாகனே! யானையைச் செலுத்து; இச் சிறுவர்களை மிதித்துக் கொல்லச் செய்" என்று ஆணை பிறப்பித்தான்.

என்ன காரணம் என்று அறியாமல் திகைத்து நின்ற சிறுவர் இருவரும், யானையின் மணியோசை கேட்டு, அதன் மலை போன்ற நடை கண்டு, தங்களை நோக்கி வரும் நிலை கண்டு, மருண்டு மயங்கினர்! பாகன் யானையை விரைந்து செலுத்து கிறான்; பாராள்வோன் ஏவுகிறான்; கூட்டத்தை ஊடுருவிக் கொண்டு ஒரு புலவர் வந்தார்.

நிலைமை அவருக்கு வேதனை தந்தது; அதனை நினைத்துப் பார்க்கவே கொடிதாக இருந்தது. அதனால் 'வேந்தனே நிறுத்து' என்று கட்டளையிட்டார்! கட்டளைதான். அது! "யான் கூறுவதைக் கேள்! அதன் பின்னும் யானையை ஏவ வேண்டு மாயின்... அதுவே உன் விருப்பு ஆயின் ஏவு! அதுவரை நிறுத்து" என்றார்.

கூட்டத்தினர் பார்வையெலாம் ஒரு முகமாகப் புலவர் மேலும், புவியாள்வோன் மேலும் மாறி மாறிப் பாய்ந்து நின்றன! அமைதி குடி கொண்டது! யானை தன் தலையசைப்பை விடவில்லை! அதன் காற் கீழ்ப்பட இருந்த சிறுவர்களும் மயக்கம் நீங்கினர் இல்லை!

66

"அரசே! புறா ஒன்றைக் காப்பதற்காகத் தன்னுடலை அரிந்து தந்த பெருமைக்குரிய செம்பியன் என்னும் சிபி உன் முன்னோன்! அவன் பரம்பரையில் வந்த உன்னை அருளாளன் என்பேன். ஆனால் உன் செயல் உன் பரம்பரைக்கோ, உனக்கோ பொருந்துவதா? பெருமை தருவதா? இல்லவே இல்லை என்பதை நீ அறிவாய்?