உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் வருமுறை

திருக்குறள், 'வையகம் தழுவிய வாழ்வியல்' கூறும் நூல் அது தோன்றியது தமிழ் மண்ணில்தான். ஆனால்,

'தோன்றிற் புகழொடு தோன்றுக'

என்னும் தன் இலக்கணத்திற்குத் தானே இலக்கியமாய் வையகப் பரப்பெல்லாம் வளைத்துக் கொண்டு கிளைத்துத், தண்ணிழல் பரப்பும் நிழலாயிற்று அது.

"ஆதிபகவன் முதற்றே உலகு'

என எழுவாயில் முழங்கிய முழக்கம், நூற்பொது முழக்கமாகும்.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல்"

"உலகம் தழீஇயது ஒட்பம்

"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு"

"உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்"

"பண்புடையார்ப் பட்டுண் டுலகம்"

"சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம்'

இவ்வாறு 'உலக உலா' ஒன்றா? இரண்டா? திருக்குறளில்,

உலகம்,உலகு என வருவன் 51 இடங்கள்.

வியனுலகம் வரும் இடங்கள் 2.

ஞாலம் வரும் இடங்கள் 5.

வியன்ஞாலம் வரும் இடம் 1.

வைப்பு, வையம், வையகம் என வரும் இடங்கள் 19.