உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

இவற்றுள், வியனுலகம் வியன்ஞாலம் என்பன பேரண்டம் என்னும் பொருளன. இன்னும், உலகப் பொதுமைக் குறிப்பின் எண்ணற்றன திருக்குறளில் உள்ளன.

"வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி' என, உலகச் சான்றையெல்லாம் ஒருங்கு திரட்டிப் பார்த்து, உண்மை காண ஏவுவதும் வான்குறளாகும்!

திருக்குறளை மேல்வைப்பாகக் கொண்டு எழுந்த நூல்கள் பல. அதனை, மேற்கோள் காட்டி நடையிட்ட நூல்கள் அன்றித் தமிழ் இலக்கியப் பரப்பில் வேறு நூல்கள் காணற்கு அரிது. 1330 குறள்களுக்கும் சான்று காட்டிய திருக்குறள் குமரேச வெண்பா'வும் பெரும்பாலும் தொன்மக் கதைகளே வைப்பாகக் கொண்டதாயிற்று! இற்றை நடைமுறை வாழ்வுக்கு உலகம் தழுவிய வரலாற்றுச் சான்றுகளையே குறள் நெறிக்குச் சான்றாகக் கொண்டு வெளிப்படுவது வையகம் தழுவிய வாழ்வியல்' என்னும் இந்நூலாகும்.

தமிழ் மண்ணில் தோன்றியது குறள் எனினும், அதன் தனியுயர் பார்வை உலகளாவியதே என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக வருவன இத்தொகுதியில் அமைந்துள்ள வரலாற்றுக் காட்சிகள். இதன் இரண்டாம் தொகுதியும் எழுதி முடிக்கப் பட்டது. மூன்று நான்கு எனத் தொகுதிகள் தொடரவும் ஆகும். குறிக்கோளோடு பார்ப்பின் ஒவ்வொரு குறளுக்கும் உலகியல் நடைச்சான்று உண்டு என்பது மெய்யாகும்.

இத்தொகுதிகளின் மூலப் பொருட் சான்றுகள் முழுதுலகும் தழுவியவை. இடமும் காலமும் கடந்து, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் பெருநெறிப்பட்ட குறளுக்குத் தகவே அமைந்தவை.

நிகழ்ச்சி அல்லது காட்சி அல்லது வரலாறு ஒன்றனைக் காட்டி, “இத்தகு காட்சி ஒன்றனை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே! என்னே! என்று வியந்து நின்றாரோ? அதனால், 'இந்தக்' குறளைச் சொன்னாரோ? என்னும் கட்டொழுங்கில் அமைவன ச்சான்றுகள்.