உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

63

தன் நடை, உரைநடையா? பாநடையா? உரைப்பா நடையா? எல்லாம் பின்னிப் பிணைந்த 'உரைவீச்சு' நடை எனல் அமையும்!

"வையகம் தழுவிய வாழ்வியல்' என்பது, நெய்வேலி, உலகத் தமிழ்க் கழகச் சார்பில் நிகழும் திருவள்ளுவர் கோட்டத் தொடர் பொழிவுத் தூண்டலாயிற்று. அத்தொடர், தொடர்ந்தே நிகழ்கின்றது நூலாக்கமும் தொடர்ந்தே நிகழ்கின்றது. முதல் இரண்டு தொகுதிகளின் உருவாக்கம் நிறைந்த அளவில், அதனைத் தமிழ்கூறு நல்லுலகப் பொருளாக்கும் வகையில் அச்சீட்டுப் பொறுப்பை அவாவினார் அருமை இசைஞர். அன்புச்செம்மல். தஞ்சைத் திருக்குறள் பேரவைச் செயலர் திருமலி பழநிமாணிக்கனார். இந்நூல் தூண்டலும் துலங்கலுமாக விளங்கும் இப்பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியன்.

"திருக்குறள் நம் வாழ்வியலுக்குத் தகுவதா?” என்று அதன் பொருள் திறம் அறிந்தோர் ஐயுறார். தம் இயலாத் தன்மையை அதன் மேல் ஏற்றிச் சொல்வார். உலகளாவிய சான்றோர் சான்றுகள் கண்டேனும் மீள்பார்வை பார்க்கவும், மேன்மைக் குறள் வாழ்வு மேற்கொள்ளத்தக்கதே என முடிவு எடுக்கவும், "உலகுக் கென அமைந்த ஒரு நூல் திருக்குறளே" எனத் தேர்ச்சி கொள்ளவும் இத்தொகுதிகள் கட்டாயம் தூண்டுமென

நம்புகின்றேன்.

வாழிய வள்ளுவம்! வாழிய வையகம்!

திருவள்ளுவர் தவச்சாலை,

தமிழ்த் தொண்டன்,

அல்லூர்

இரா. இளங்குமரன்

திருச்சி மாவட்டம்-620 101

5-12-93.