உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ சிவ

தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே

தவத்திரு.

குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி 623 206

-

ப.மு.தே மாவட்டம்

அணிந்துரை

புலவர் இராமு. இளங்குமரனார் சிறந்த அறிஞர். வள்ளுவத்தைப் பலகாலும் பயின்றவர்; அனுபவித்தவர் இளங்குமரனார் அவர்கள் “வையகம் தழுவிய வாழ்வியல்" என்ற எளிய கதை வடிவில் திருக்குறளுக்கு விளக்கம் எழுதி யுள்ளார். ஒரு திருக்குறள், அதற்கேற்றாற்போல் ஒரு சிறுகதை. நல்ல முயற்சி திருவள்ளுவரின் ஆண்டு கருதிக் கிழவர் ஆக்கி விட்டார். திருவள்ளுவக் கிழவரின் பயணம் தொடர்கிறது.

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்ற திருக்குறளுக்கு, பெல்சிய நாட்டுப் பெண்கள் தமது கணவன்மாரைத் தமது முதுகில் சுமந்து சென்ற வரலாறு எடுத்துக் காட்டப்படுகிறது. "மனத்தொடு மனம் பேசின்" என்ற சொற்றொடர் உள்ளத்தைத் தொடுகிறது. 'கற்பு' கற்பிக்கப் பெறுவதில்லை. கற்றுக் கொள்ளப் படுவது' என்ற வரி மகளிர் உலகத்தின் கவனத்திற்கு உரியது.

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்"

என்ற திருக்குறளுக்குச் சீன நாட்டு எரிமலை வெடித்ததைச் சான்றாக வைத்து” “ஆக்கமும் கேடும் ஆக்கும் இயற்கை” என்று எழுதியிருப்பது மிகவும் சிறப்பு. ஊழுக்கு இயற்கை என்று பொருள் கொள்கிறார் போலும், இது ஆய்வுக்குரிய செய்தி.

ஐயர் ஏடு தேடி பெற்ற வரலாற்றைச் சுவைபடி எழுதியதுடன்.