உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்றாற்றும் கொல்லோ உலகு"

65

என்ற திருக்குறளுடன் இணைத்துக் கதையை முடித்திருப்பது மிகவும் சிறப்பு.

திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு சுற்றுப்புறச் சூழ்நிலைத் தூய்மையை விளக்குகின்றார். இதற்கு நூலாசிரியர் பயன்படுத்தியுள்ள திருக்குறள்,

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”

என்பது. நாள்தோறும் அடுத்த வீட்டவர் கொட்டிய குப்பையை அள்ளிக் கொட்டிய அற்புதச் செயலை இன்று செய்வார் யார்? இக்கதையில் “வன்மை மென்மைக்கு நாணித் தோற்றது" என்ற அறிவுரையையும் கூறியுள்ளார்.

சின்னஞ்சிறு குழந்தையாக இருந்த சர். ஐசக் நியூட்டன் இளமையிலேயே புவியீர்ப்பு ஆற்றலைக் கண்டுபிடித்த செய்தியை,

"உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து'

55

என்ற திருக்குறள் வழி விளக்கியிருப்பது மிகவும் அருமை

அமெரிக்க நாட்டுத் தலைவன் ஆபிரகாம் அன்பு வழியிலேயே அதிகாரத்தைப் பயன்படுத்தினான் என்பதற்கு எடுத்துக காட்டாக,

"பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து

என்ற திருக்குறளை எடுத்துக் காட்டியிருப்பது மிகவும்

பொருத்தமானது.

66

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

என்ற திருக்குறளை மையமாகக்கொண்டு குருதிக் கொடையை விளக்கி எழுதியிருப்பது அற்புதம் இந்தக் கதையில் மொழி வளம் கொழிக்கிறது