உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

"உயிர்க்கு உறுதியாம் குருதியை உவந்து வழங்கின!

குலமும் இல்லை; குடியும் இல்லை;

சாதியும் இல்லை; சமயமும் இல்லை;

மொழியும் இல்லை; எதுவும் இல்லை. இருந்ததெல்லாம் ஒரே ஓர் இரக்கம் - உருக்கம்!”

என்ற வரிகள் கற்போர் நெஞ்சத்தைக் கவரும் தகையன.

திருக்குறள் கருத்துக்களை எளிதில் மக்களிடம் பரப்ப, புலவர் இராமு இளங்குமரனார் மேற்கொண்ட முயற்சி நன்முயற்சி. மிகவும் பாராட்டுதலுக்குரியது. பயனுடைய முயற்சி. தமிழ்நாடு, புலவர் இராமு.இளங்குமரனார் அவர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளது.

புலவர் இராமு. இளங்குமரனார் அவர்கள் பல்லாண்டுகள் ழ்ந்து இது போன்ற பல படைப்புக்களைத் தரவேண்டும் என்பது நமது விருப்பம்.

இன்ப அன்பு

நாள்: 1-2-95

அடிகளார்