உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

முனைவர் ஔவை நடராசன்

துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.

நூலாசிரியர் திறம், நூலின் சீர்மை, நூற்பொருளின் மாண்பு என்ற மூன்று தகுதிகளால் ஒரு நூல் சிறப்பெய்தும் என்பர். புலவர் இளங்குமரனார் நுண்மான் நுழைபுலப் பன்மாண் புகழ் சான்றவர். திருக்குறளுக்கே தம்மை ஆட்படுத்திக்கொண்ட திறத்தால் திருக்குறள் வாழ்வகம் அமைத்துத் தமிழ் முனிவராய் ஒளிர்கின்றார். செழுந்தமிழ்ப் புலமைச் சீர்த்தி நிரம்பிய நம் புலவர் பன்னூலாசிரியர். இன்றைய தமிழ் மக்களுக்கு வாய்த்த அருங்கலைச்செல்வர். அருப்பெறல் மரபின் பெரும்பெயர் முருகன் எனலாம்.

பல்வேறு நிலைகளில் ஆய்வாளர்களுக்கு அரும்பொருள் சுரக்கும் ஊற்றாகத் திருக்குறள் திகழ்கிறது. தமிழ் மாமறையை ஓதி உணரவேண்டுமென்பது தமிழ் மக்களின் இன்றியமையாக்

கடமையாகும்.

வையகம் தழுவிய வாழ்வியல் என்ற பொருண்மையில் உலகச் செய்திகளை ஒருங்கிணைத்து அவற்றுக்குப் பொருந்து மாறு திருக்குறள் அமைவதை ஆசிரியர் அழகுறச் சுட்டிக் காட்டுகிறார்."ஒவ்வோராண்டும் சனவரித் திங்கள் பத்தொன் பதாம் நாள் பெல்சிய நாட்டிற்குப் "பெண்டிர் விழா" எனப்படும் பெருவிழா அமைதல் உலகறி செய்தி. இத்தகு பெண்டிரை வள்ளுவக்கிழவர் கண்டாரோ! என்னே பெருநிலை! என்னே பெருநிலை என்று வியந்து நின்றாரோ? அதனால், “பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின்' என்றாரோ?" இவ்வாறு ஐம்பத்தேழு திருக்குறட்பாக்கள் நிகழ்ச்சி விளக்கம் பெறுகின்றன ஐம்பத்தேழு நாளுக்கும்