உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

95

(எ.டு) மகனொடு தந்தை வந்தான் உடனிகழ்ச்சிப் பொருள் மன்னவனோடு மந்திரி வந்தான்

பொருள்

தலைமைப்

மாணாக்கனோடு ஆசிரியன் வந்தான் தலைமையில் பொருள்.

உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சங்கள் :

உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சங்கள் பண்படியாகத் தோன்றி அகரவிகுதி பெற்று வரும்.

(எ-டு) மெல்லப் பேசினாள்.

‘உம்’ என்னும் இடைச் சொல் :

உம் என்னும் இடைச் சொல் எதிர்மறையும், இருவகைச் சிறப்பும், ஐயமும், இருவகை எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும், ஆக்கமும் ஆகிய எட்டுப் பொருளைத்தரும்.

(எ.டு)

எதிர்மறை : சாத்தன் வருதற்கும் உரியன் – இதில்வாராமைக்கும் உரியன் எனப் பொருள் படுதலால் எதிர்மறை.

உயர்வுசிறப்பு : குறவரும் அஞ்சுங்குன்று குன்றின் உயர்வை விளக்குதலால் உயர்வு சிறப்பு.

இதில் குறவர் முகமாகக்

இழிவுசிறப்பு : புலையனும் விரும்பாத யாக்கை’ இதில் புலையன் முகமாக உடம்பின் இழிவை விளக்குதலால் இழிவு சிறப்பு.

ஐயம் : அவன் வெல்லினும் வெல்லும் உணர்த்துதலால் ஐயம்.

இதில், துணியாமையை

இறந்தது தழுவிய எச்சம் : இன்றும் கொற்றன் வந்தான். இதில், முன் கொற்றன் வந்ததல்லாமல் என்னும் பொருளைத் தந்ததால் இறந்தது தழுவிய எச்சம்.

எதிரது தழுவிய எச்சம் : கொற்றனும் வருவான் என்னும் பொருளைத் தந்ததால் எதிரது தழுவிய எச்சம்.

முற்று : தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் இதில் குறைவில்லாமைப் பொருளைத் தருதலால் முற்று.

எண் (அளவு) சாத்தனும் கொற்றனும் தேவனும் பூதனும் வந்தார்.

தெரிநிலை : ஆணும் அன்று; பெண்ணும் அன்று. ஆயினான். ஆக்கம்; வலியனும்