உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

4 இளங்குமரனார் தமிழ்வளம்

ம்மைத் தொகை :

எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை யளவைகளாற் பொருள்களை அளக்குமிடத்து எண்ணும்மை டையிலும் இறுதியிலும் மறைந்து நிற்கப், பெயரோடு பெயர் தொடர்வது உம்மைத் தொகையாகும்.

(எ-டு)

இராப்பகல்; ஒன்றேகால்

எண்ணலளவை யும்மைத் தொகை

கழஞ்சேகால் ; தொடியே கஃசு எண்ணலளவை யும்மைத் தொகை

கலனே குறுணி ; நாழியாழாக்கு

சாணரை ; சாண்விரலம்

உயிரில்லாப் பொருள்களின் குணப்பண்பு :

தீ

வட்டம், முக்கோணம், சதுரம் முதலிய பலவகைப்பட்ட வடிவுகளும், தீ நாற்றம், நறுநாற்றம் என்னும் இருவகை நாற்றங்களும், வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்கின்ற ஐவகை நிறங்களும் கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, இனிப்பு, கார்ப்பு என்கின்ற அறுவகைச் சுவைகளும், வெம்மை, தண்மை, வன்மை, மென்மை, நொய்ம்மை, சீர்மை, இழுமெனல், சருச்சரை என்கின்ற எண் வகை உணர்ச்சிகளும் உயிரற்ற பொருள்களின் குணங்களாகும். உயிரினங்கட்கு வழக்கில் உள்ள ஆண்பாற் பெயர்கள் :

குரங்கினுள் ஏற்றைக் கடுவன் என்று கூறுதலும், கூகையைக் கோட்டான் என்று கூறுதலும், கிளியைத் தத்தை என்று கூறுதலும், பூனையினைப் பூசை என்று கூறுதலும், குதிரையுள் ஆணினைச் சேவல் என்று கூறுதலும், பன்றியை ஏனம் என்று கூறுதலும், ஆண் எருமையினைக் கண்டி என்று கூறுதலும் வழக்கினுள் உள்ளன என்பதாம்.

உயிருடைப் பொருள்களின் தொழிற்பண்பு :

துய்த்தல், உறங்கல், தொழுதல், அணிதல், உய்த்தல், வாழ்த்தல், அரற்றுதல், வரைதல் முதலியவை உயிருடைப் பொருள்களின் தொழிற்பண்புகளாகும்.