உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

உயிருடைப் பொருள் உயிரல் பொருள் ஆகிய இருபொருள்களின் தொழிற்பண்பு :

97

தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், இசைத்தல், ஈதல் ஆகியவை இருவகைப் பொருள்களின் தொழிற்பண்புகளாகும்.

உயிருடைப் பொருள்களின் குணப்பண்பு :

அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, ஓர்ப்பு, கடைப்பிடி, காமமயக்கம், எண்ணம், வெறுப்பு, மகிழ்ச்சி, இரக்கம், வெட்கம், வெகுளி, துணிவு, பொறாமை, அன்பு, எளிமை, தளர்ச்சி, துக்கம், இன்பம், இளமை, முதுமை, பகை, வென்றி, மறத்தல், ஊக்கம், மறம், மதம், மறந்து செய்யுங்குற்றம், கற்பு, மடமை, நடுவு நிலைமை ஆகியவை யிருடைப் பொருள்களின் குணப் பண்புகளாகும்.

‘உரு’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

உரு என்னும் உரிச்சொல் உட்கு என்னும் பண்பை யுணர்த்தும். உட்கு = அச்சம்; துன்பம்; எ-டு:உட்கார்தல்

(எ-டு) உருகெழு கடவுள்’

உருபு மயக்கம் : :

எந்த வேற்றுமை யுருபால் எந்த வேற்றுமைப் பொருள் சொல்லப் பட்டதாயினும், உருபு சென்ற வழியே பொருள் சேராமல் அப்பொருள் சென்ற வழியே அவ்வுருபு சேருவது உருபு மயக்கமாகும்.

(எ.டு) “நாகு வேயொடு நக்கு வீங்குதோள் என்றவிடத்து வேய் உடனிகழ்ச்சிப் பொருளாகாது செயப்படு பொருளாய் நிற்றலால் 'ஒடு' உருபை ஐ யுருபாகத்திரித்துக் கொள்ள வேண்டும்.

காலத்தினால் செய்த உதவி, காலத்தின்கண் செய்த உதவி.

உருபும் வினையும் அடுக்கி முடிதல் :

எட்டு வேற்றுமை யுருபுகளும் விரிந்தாயினும் மறைந் தாயினும் ஒன்று பல அடுக்கி வரினும் கலந்து பல அடுக்கி வரினும், வினைமுற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும் ஒன்று பல அடுக்கி வரினும், அப் பலவுந் தம்மை முடித்தற்குரிய ஒரு சொல்லைக் கொண்டு முடியும்.