உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம்

4

(எ-டு) சாத்தனையுங் கொற்றனையும்

உருபுகள் விரிந்தும் மறைந்தும்

வாழ்த்தினான் அருளற முடையவன் ஒன்று பல அடுக்கல்

அரசன் பகைவனை வாளால் வெட்டினான்

}

மெல்லினம் மிக்கன.

உருபுகள் விரிந்தும், மறைந்தும், கலந்தும் பல அடுக்கல்

ஆடினான் பாடினான் சாத்தன் வினைமுற்று ஒன்று இளையண் மெல்லியண்மடந்தை பல அடுக்கல்

கற்ற கேட்ட பெரியோர் பெயரெச்சம் ஒன்று பல

நெடிய கரிய மனிதன்

அடுக்கல்

கற்றுக் கேட்டறிந்தோர்

விருப்பின்றி வெறுப்பின்றியிருந்தார்

உருபேலாப் பெயர்கள் :

வினையெச்சம் ஒன்று

பல அடுக்கல்

நீயிர், நீவிர், நான் முதலாகிய மூன்று பெயர்களும் எழுவாயல்லாத வேற்றுமைகளை ஏற்கா.

உரிச்சொல் :

குணமும் தொழிலுமாகிய பல வகைப்பட்ட பொருள்களின் பண்புகளையெல்லாம் தெரிவிக்கிற பெயராகி, ஒரு குணத்தையும், பலகுணத்தையும் தெரிவிப்பவையாய் பெயர்ச்சொல், வினைச் சொற்களைவிட்டு நீங்காதவையாய் செய்யுளுக்கே உரிமை பூண்டு வருபவை உரிச்சொற்களாகும். இவ்வுரிச்சொல் ஒரு குணந் தழுவிய பல உரிச்சொற்கள், பலகுணந்தழுவிய ஒர் உரிச்சொல் என இரண்டுவகைப்படும்.

உரையின் பொதுவிலக்கணம் :

மூலப்பாடமும், கருத்துரையும் சொற்றிரிபும், சொற் பொருளும், பொழிப்புரையும், எடுத்துக்காட்டும், வினாவும், விடையும், வேண்டியவைகளைத் தந்துரைத்தலும், வேற்றுமையுருபு முதலியவை தொக்கு நிற்பின் அவற்றை விரித்துரைத்தலும், எடுத்துக்கொண்ட அதிகாரம் இதுவாகலின் இச்சூத்திரத்து அதிகரித்த பொருள் இதுவென அவ்வதிகாரத்தோடு பொருந்த உரைத்தலும், ஐயம் உண்டாகிய விடத்து இதற்கு இதுவே பொருளெனத் துணிந்துரைத்தலும், இவ்வாறு கூறியதனால் வந்தபயன் இதுவென உரைத்தலும், ஆசிரியரது கூற்றுக்களை எடுத்துக்காட்டலும் என்று சொல்லப்பட்ட பதினான்கு வகையாலும் நூலுக்கு உரை உரைக்கப்படும்.