உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

99

‘உவப்பு’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

உவப்பு என்னும் உரிச்சொல் உவகை என்னும் பண்பை உணர்த்தும்.

(எ.டு) "உவந்துவந்தார்வ நெஞ்ச மோடாய் நலனளைய உவமையாகுபெயர் :

உவமையின் (உபமானத்தின்)

""

பெயர் பொருளுக்கு

(உபமேயத்திற்கு) ஆகுவது உவமையாகுபெயர் எனப்படும்.

(எ.டு) பாவை வந்தாள் இதில் பாவை என்னும் உவமையின் பெயர் அதுபோன்ற பெண்ணுக்கு ஆயிற்று.

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை :

தன்மை யெழுவாயோடு முன்னிலை யெழுவாயேனும் படர்க்கை யெழுவாயேனும் இவ்விரண்டு எழுவாயுமேனும் அடுக்கிவரின் தன்மைப் பன்மை, பயனிலை கொண்டு முடியும். து உளப்பாட்டுத் தன்மைப் பன்மை எனப்படும்.

(எ.டு) யானும் நீயும் போயினோம்.

யானும் அவனும் போயினோம்

யானும் நீயுமவனும் போயினோம்.

உளப்பாட்டுப் பன்மை முன்னிலை :

தன்மையோடு கூடிய முன்னிலை படர்க்கைகள் தன்மையானாற்போல முன்னிலையோடு கூடிய படர்க்கையும் முன்னிலையாகும்.

(எ.டு) உண்டனிர்

உண்டீர்

குழையினிர் குழையீர்

}

நீயும் அவனும்

உளப்பாட்டு முன்னிலைப் பன்மை : :

முன்னிலை எழுவாயோடு படர்க்கை யெழுவாய் அடுக்கிவரின், முனனிலைப் பன்மைப் பயனிலை கொண்டு முடியும். அது உளப்பாட்டு முன்னிலைப் பன்மை எனப்படும்.

(எ.டு) நீயுமவனும் போயினீர்.