உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம்

4

உயர்திணையிற் பாற் பொதுப் பெயர் :

ஒருவர், பேதை, ஊமை (மூங்கை) என வரும் பெயர்கள், உயர்திணையில் ஆண், பெண் என்னும் இரண்டு பால் கட்கும் பொதுப்பெயர்களாம்.

(எ.டு) ஆடவருளொருவர்,

பேதையவன்

ஊமையிவன்

பெண்டிருளொருவர்.

பேதையவள்

ஊமையிவள்

உயர்திணை ஆண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்கள் :

அன், ஆன், மன், மான், ன் என்னும் விகுதிகளை இறுதியிலுடைய பெயர்கள் உயர்திணை யாண் பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.

(எ-டு) பொன்னன்

பொருளன் திருமன்

கோமான்

பிறன்

உயர்திணைப் பலர்பாற்படர்க்கைப் பெயர்கள் :

அர், ஆர், கள், மார், ர் என்னும் விகுதிகளை இறுதியிலுடைய பெயர்கள் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்களாம்.

(எ.டு) குழையர், குழையார், கோக்கள், தேவிமார், பிறர், தச்சர்கள், தட்டார்கள்.

உயர்திணை :

உயர்வாகிய பகுப்பு மக்கள், தேவர், நரகர் ஆகிய மூவகைப் பிரிவினைரையும் குறிக்கும். ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்று பால்களும் இத்திணைக்கு உரிய பால்களாகும்.

“மக்கள் தேவர் உயர்திணை” என்பது நன். “மக்கள் தாமே ஆறறிவுஉயிரே” என்பது தொல்.

(எ.டு) ஆடவர், காளையர்

பெண்டிர், மகளிர்

மக்கள், அவர்

ஆண்பால்

பெண்பால்

பலர் பால்,