உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

உயர்திணை தொடர்ந்த அஃறிணை :

101

உயர்திணை யெழுவாயோடு கிழமைப் பொருள் படத் தொடர்ந்து எழுவாயாக நிற்கும் அஃறிணைப் பொருளாதி யாறும் உயர்திணை வினையான் முடியும்.

(எ.டு) நம்பி பொன் பெரியன்

பொருள்

நம்பி நாடு பெரியன் இடம்

நம்பி வாழ்நாள் பெரியன்

காலம்

நம்பி மூக்குக் கூரியன் சினை

நம்பி குடிமை நல்லன்

நம்பி நடை கடியன்

குணம் தொழில்

இங்கே உயர்தினை எழுவாயின் அஃறிணை எழுவாயும் முடிந்தமை அறிக.

பயனிலையோடு

உயர்திணைப்பெண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் :

அள், ஆள், இ, ள் என்னும் விகுதிகளை இறுதியில் டைய பெயர்கள் உயர்திணைப்

உடை

படர்க்கைப் பெயர்களாகும்.

பெண்பாலொருமைப்

(எ.டு) குழையள், மூவாட்டையாள், கன்னி, தமள்.

உலக வழக்கத்தைத் தழுவி நடத்தல் :

உயர்ந்த மக்கள் கூறுவன சிறந்த நெறியோடு கூடுதலின் அந்நெறி நடத்தல் செய்யுள் வழக்கத்திற்கு முறைமையாகும். எனவே, வழக்கழிய வருவன செய்யுட்கண் வரப்பெறா என்பதாம். ஊர்வனனவற்றிற்கு இளமைப் பெயர் :

பார்ப்பு, பிள்ளை என்னும் இரண்டும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களின் இளமைப் பெயரைக் குறிப் பனவாம்.

""

(எ-டு) 'யாமைப் பார்ப்பின் அன்ன ஐங்குறுநூறு.

66

“முதலை தின்னும் பிள்ளைத்து என்ப

எடுத்தலளவை யாகுபெயர் :

குறுந்

நிறுத்தளக்கின்ற தூக்கு, துலாம் கிலோ முதலிய பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகுவது எடுத்தலளவை யாகுபெயராம்.