உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம் 4

(எ-டு) ஒரு கிலோ கொடுத்தான் என்றதில் கிலோ என்னும் எடுத்தலளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆயிற்று.

எண்ணலளவையாகு பெயர் :

எண்ணியளக்கின்ற ஒன்று, இரண்டு, அரை, கால் முதலிய எண்ணுப்பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகுவது

எண்ணலளவையாகுபெயராம்.

(எ.டு) கால்நோகும்

என்றதில் கால் என்னும்

எண்ணலளவுப் பெயர் உடம்பில் அவ்வளவைக் கொண்ட உறுப்புக்கு ஆயிற்று. (கால் ஊன்றல் பொருளும் தரும்)

எண்ணுவண்ணம் :

எண்ணுப் பயின்றுவருவது எண்ணு வண்ணமாகும்.

(எ.டு) "நிலம் நீர் வளி விசும் பென்ற நான்கின் அளப்பரியையே”

66

'நாள்கோள்திங்கள் ஞாயிறுகனையழல்

ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத்தனையை ய

எய்யாமை என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

""

எய்யாமை என்னும் உரிச்சொல் அறியாமை என்னும் பண்பையுணர்த்தும்.

(எ-டு) “எய்யாமை யல்லை நீயும் வருந்துதி”

எல்லாவிடத்தும் வரும் அசைச்சொற்கள் :

யா, கா, பிற பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், அன்று, ஆம், தான், தாம், இசின், ஐ, ஆர், என், என்ப என்னும் இருபத்தொன்றும் மூவிடத்தும் வரும் அசை நிலையிடைச் சொற்களாம்.

‘எறுழ்’ என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

எறுழ் என்னும் உரிச்சொல் வலிமை என்னுங்குறிப் புணர்த்தும்.

(எ.டு) "போரெறுழ்த் திணிதோள்

‘என’ (‘என்று’) - என்னும் இடைச்சொற்கள் :

என என்னும் டைச்சொல் வினையும், பெயரும், குறிப்பும், இசையும், எண்ணும், பண்பும் ஆகிய ஆறு பொருளிலும் சேர்ந்து வரும்.